பக்கம்:வேலின் வெற்றி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - வேலின் வெற்றி விளைக்கும் காவிரியாற்றின் வடகரையில் உள்ள மண்ணி நதியின் மருங்கே வந்தார், முருகப்பெருமான். கார்மேகங்கள் திரண்டு செல்ல, ஆங்கமைந்த மதில் சூழ்ந்த இந்திரன் மாநகரின் வளத்தினை (ಹತ್ತೊಲ್ಲ అ@5మి. 'இது ), நாம் இருத்தற்கேற்ற நல்ல இடம் என்றார். ஆம் ಘLಿ: ம்ொழி கேட்ட வானவர், அழகெலாம் ஒருங்கே துன்பமும், வாய்ந்த, அந் நகர்க்குச் சேய்ஞலூர் என்று பெயர் - இட்டர்கள். கொடிய திறம் படைத்த தாரகன் மாய மாமலையொடு மாய்ந்து ஒழிந்தமையால் இந்திரன் துன்பம் நீங்கி இன்பம் நிறைந்த் மனத்தினனாய் இருந்தான். - மேனி வருந்தாமல் அமிர்தத்தைப் பெற்று அருந்தியவ்ன் போல், இந்திரன் அங்கமெல்லாம் குளிர்ந்திருந்தபோது, சீகாழியிலுள்ள வன்த்தைக் காக்கும் தெய்வம் அவனிடம் போந்து வணங்கிற்று. சூரன் கொடுமைக்கு அஞ்சி விண்ணுலகம் விட்டு வந்த நாளில் சீகாழி வனத்தில் தன்னிடம் ஒப்புவித்த இந்திரன் நகைகளையும் இந்திராணியின் நகைகளையும் முடிப்பாகக் கொண்டுவந்து முன்னே வைத்து, "ஐயனே சிவபெருமான் வீற்றிருந்தருளும் சீகாழிப் பதியில் இந்திராணியுடன் போந்து நீர் தவம்செய்த நாளில், என்னிடம் கொடுத்துவைத்த நகைகள் இவை; பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று அத் தெய்வம் கூறிற்று. இந்திராணியின் ജ്ഞണ്ട് கண்டபோது, நெய்யிட்ட நெருப்புப் போல இந்திரன் மனத்தில் காதல் நோய் மேலிட்டது. அந் நகையினைப் பார்த்து அவன் இரங்கினான், ஏங்கினான்: விம்மினான்; வெதும்பினான்: பெருமூச்சு விட்டான், மயக்க முற்றான். காமமே தீமையெல்லாம் தரும்; சிறப்பையும் செல்வத்தையும் க்ெடுக்கும்; நல்லறிவைத் தொலைக்கும்; நன்னெறியை விலக்கி நரகத்திற் சேர்க்கும்; ஆதலால், அதனினும் பெரும்பகை வேறுண்டோ?” என்று எண்ணி அவ் வுணர்ச்சியைத் தவிர்த்தற்காக முருகவேள் முன்னே சென்றான், இந்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/56&oldid=919871" இலிருந்து மீள்விக்கப்பட்டது