பக்கம்:வேலின் வெற்றி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 47 மேகங்கள் உலாவும். வானத்தில் தோன்றிய சூரியன், தன் முருகவேள் ததிர்களாகிய கரங்குவித்து ೧ಾಗುguni Tುಕಿ சிவபதிகளை Qఆుఖ, అల్రెడిమి போர்க்களத்தை ി.@l வணங்குதல் புறப்பட்டுப் பெருஞ்சேனையும் தேவரும் சூழப் * : " போயினார்; பாம்ப்ணையிற் பள்ளிகொண்டு கண்வளரும் திருமாலுக்கும், மங்கை பங்கனாகிய சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை மானிடர் அறியும் வண்ணம் வியாச மாமுனிவர் தம் எடுத்த கையினால் உணர்த்தியருளிய காசிப்பதியைக் கண்டார்; உலகத்தைப் பெருங்கடல் மூடும் பிரளய காலத்திலும் அழிவின்றித் திருமால் பிரமன் முதலிய தேவருக்கு இருப்பிடமாய், திருக்கயிலாய மலையை ஒத்ததாய், எம்பெருமான் மாமர்த்தடியில் வீற்றிருந்தருளும் பெருமையுடையதாய் உள்ள பம்பை நதி சூழ்ந்த காஞ்சி மாநகரைக் கண்டார்; எனக்கு நிகராவார் எவரும் இலர் என்று தனித்தனி திருமாலும் பிரமனும் எண்ணிப் பிணக்குற்றபோது அவ் விருவருக்கும் நடுவே, அடியும் முடியும் காணலாகாத அனற் பிழம்பாய்த் தோன்றி, நினைப்பவர்க்கெல்லாம் விரைவில் முத்தியளிக்கும் தன்மையில் நிகர் அற்றதாய் விளங்கும் திரு அண்ணாமலையைத் தரிசித்தார். நடுநாட்டு மன்னனாகிய நரசிங்க முனையரையன் நடத்திய திருமணத்தைத் தடுத்து மணமகனாய சுந்தரமூர்த்தியை ஆட்கொள்ளும் வண்ணம் ஒரு முதிய வேதியனாக வந்து, அடிமைச் சீட்டைக் காட்டி வழக்கில் வென்று அருளிய சிவபெருமான் அமர்ந்த பெண்ணையாறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரையும் கண்டார்; இனிய செழுஞ்சோலை சூழ்ந்த தில்லையம்பதியிலே யுள்ள பொன்னம்பலத்தில் சிவகாமி யம்மையார் வணங்க, விராட்புருடனது இதய கமலத்தில், அண்டரும் மதித்தற்கரிய முறையில் ஈசன் ஆடும் அற்புதத் த்னிக் கூத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து களிப்புற்று வணங்கிச் சென்றார்; அகத்திய முனிவரது கமண்டலத்தினின்று நீங்கிப் பூமியிலே பாய்ந்து, பல கிளைகளாய்ப் பிரிந்து பற்பல பெயர்களைத் தாங்கி, சோழ நாட்டிற் கன்னலும் செந்நெல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/55&oldid=919869" இலிருந்து மீள்விக்கப்பட்டது