பக்கம்:வேலின் வெற்றி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வேலின் வெற்றி றிருந்தது, அப் பாலை. அங்கு முருகவேள் சேனையோடு எழுந் தருளியபோது அக் கொடிய காடு பெருமழையாற் குளிர்ந்த அழகிய குறிஞ்சி நிலம் போலாயிற்று. இத்தகைய பாலைவனத்தைக் கடந்து வேற்படை தாங்கிய குமரவேள், செங்குன்றுள் என்னும் சிவ பதியை வணங்கி, மணிகளையும் வயிரங்களையும் முத்து களையும் மற்றப் பொருள்களையும் அலைகளால் அள்ளி எறியும் திருச்சீர் அலைவாய் என்னும் செந்திமாநகரைச் சேர்ந்தார். அங்கே அமர்ந்து, இந்திரனை நோக்கி, "கொடுங்கோல் செலுத்தும் சூரன் முதலிய அசுரர்கள் பிறந்தவாறும், 堑 - . அவர் தவம் புரிந்தவாறும், வரம் பெற்றவாறும், <अण्ठ ,oர் திநம செய்தவாறும், இன்னும் அவர் இயற்றிய மாயமும் مئی அடைந்த வெற்றியும், அவர்தம் வலிமையும் மேன்மையும், உனக்கு அவர் இழைத்த துன்பமும் ஒன்றுவிடாமற் சொல்லுக" எனப் பணித்தார், முருகவேள். அந் நிலையில் இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி, வியாழன் வாக்கில் வல்லவராகிய வியாழன் எழுந்து, "எவர்க்கும் மறுமொழி முதல்வராகிய எம்பெருமானே! நீர் எல்லாப் கூறல் பொருளும் அறிவீர் எல்லா உயிர்களிலும் நிறைந் திருக்கின்றீர்! எங்கள் துன்பத்தைத் துடைக்கத் திருவுளங்கொண்டு குழந்தை வடிவம் கொண்டீர் உமது செய்கையை யாவரே உணர வல்லார்? ஐயனே! நீர் அசுரரது தன்மையை வினவியது அதனை அறிந்துகொள்ளும் பொருட் டன்று. அடிமைகளாகிய எமது துன்பத்தைக் களைந்து சிறந்த இன்பம் தரும் திருவருளாலே யாகும். ஆதலால், அசுரர் தன்மை களையெல்லாம் அடியேன் அறிந்தவரையில் சொல்கின்றேன்" என்று குமாரவேளை நோக்கிக் கூறலுற்றார் : மேன்மை யுற்ற காசிபனுடைய புதல்வர்களாகத் தோன்றினர், மாயையின் அறுபத்தாறு கோடி அசுரர்கள். அன்னவர்க்கு வரலாறு அரசனாய் அமைந்தான், அசுரேந்திரன். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/58&oldid=919875" இலிருந்து மீள்விக்கப்பட்டது