பக்கம்:வேலின் வெற்றி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை , 51 மனமொத்த மங்கலகேசி யென்னும் அரக்கியை மணந்து, சுரசையென்ற புதல்வியைப் பெற்றான். அம் மகள் தூயவளாய் வளர்ந்து வந்தாள், அப்போது அசுரர் குலகுருவாகிய சுக்கிரன் அம் மங்கைக்குக் கொடிய மாயா வித்தைகள் அத்தனையும் கற்பித்தார்; அவற்றில் அவள் அடைந்த திறமையைக் கண்டு மாயை என்று பெயரிட்டார்; அம் மாயையால் எதிர் காலத்தில் அசுரர்கள் எய்தநின்ற பெருமையெல்லாம் எண்ணிப் பார்த்தார். ஒப்பற்றவள் ஆகிய மாயை, திருமகளும், ரதியும், திலோத்தமையும், மோகினியும் ஒரு வடிவம் கொண்டாற் போன்ற அழகிய உருவம் பூண்டு சென்றாள். சென்றவள், காசிப முனிவருடைய தவச்சாலையின் அருகே மாயை காசிப ജഥങ്ങു அழகிய செந்தாமரைப் பொய் - ') கையும் குளமும், சோலையும், மாணிக்க மலையும் ുങ്ങിപജ് மஞ்சமும், மண்டபமும் விரைவில் உண்டாக்கினாள். மயககுதல் ஆண்டவன் திருவடியை நினைந்து ஐம்பொறி களையும் அறிவினால் அடக்கித் தன்னந் தனியராய்த் தவம் புரிந்திருந்த காசிய முனிவர் அவற்றைக் கண்டு அதிசயம் அடைந்தார். உடனே, தம் உள்ளத்தை ஒருமைப்படுத்தி முன் போலவே நற்றவம் புரியத் தலைப்பட்டார். அவ் வேளையில் அம் மாயை என்னும் மங்கை மாணிக்க மலையின்மீது தனியளாய் இலங்கித் தோன்றினாள். அம் மங்கையைக் கண்ணுற்றார், காசிபர் விண்ணுலகத்தில் விளங்கும் கற்பகவல்லி தவம் செய்து பெற்ற பூங்கொடிதான் ஈங்கு வந்ததோ என்று வியந்து நின்றார்; தனியளாக நின்ற தையலை நோக்கி, "மாதே! உனக்கு என்ன் வேண்டும் என்றாலும் இன்னே தருவேன்; மைந்தரை விரும்பினும் மகிழ்ந்து அளிப்பேன்; அன்ன வரை ஒப்பற்ற நிலையில் வைப்பேன்" என்றார். முனிவன் உரைத்த மொழி கேட்டு மாயை புன்னகை புரிந்தாள், "நான் தனியள் என்று கருதியோ இவ்வாறு உரைத்தீர். இது போன்ற பேச்சு இனி வேண்டா. இது தவமுடைய்ோர்க்குத் தகுமோ? நான் முன்னமே எண்ணி வந்த இடத்திற்குச் செல்கின்றேன். நீர் இங்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/59&oldid=919877" இலிருந்து மீள்விக்கப்பட்டது