பக்கம்:வேலின் வெற்றி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 r வேலின் வெற்றி தவம் செய்துகொண்டு இரும்” என்று சொல்லி, கங்கை யாற்றின் திசையை நோக்கிக் கடிது செல்வாள்போல நடந்தாள். முனிவரும் அவளைப் பின்தொடர்ந்தார். மங்கை அருவம் எய்தி, மாயையால் மறைந்து நின்றாள். - - முனிவர் அங்குமிங்கும் நோக்கி மங்கையைக் காணாது கவலையுற்றுக் கரைந்தார். "அந்தோ! முன்னே ஆசை கொடுத்தீர், மன்மதனை ஏவி மையல் விளைத்தீர்! என் மெய்யறிவை யெல்லாம் சிதைத்தீர்! இன்னும் செய்ய வேண்டுவது ஒன்றுண்டோ சொல்வீர்!" என்று பன்னிப் பன்னி இடர்க்கடலில் மூழ்கிச் சேர்ந்தார், முனிவர். அந் நிலையில் எவ் வினைக்கும் முன்னவளாகிய மாயை அவர் கண்ணெதிரே தோன்றினாள். கருத்தழிந்து கம்பம்போல் நின்ற காசிப முனிவர் மாயையைக் கண் களிப்பக் கண்டார்; மகிழ்ச்சி கொண்டார்; உய்ந்தேன்! உய்ந்தேன்! என்றார்; மின்னொளியைக் கண்டு மலரும் தாழ்ை மலர் போல் புன்னகை பூத்தார்; மாயையோடு கொஞ்சிக் குலாவினார். அப்போது மாயையினிடம் சூரபன்மன் என்னும் வீரன் தோன்றி னான். அவனுக்குப்பின் ஆயிரம் தலையுடைய சிங்கமுகனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அசமுகியும் பிறந்தார்கள். காசிய முனிவர் அவரை நோக்கி, "என் வீர மைந்தர்காள்! சூரன் முதலிய உமக்கு உறுதி யக்கும் செய்தி யொன்று மைக்காகக் Qకుణిpé. நீவிர் மூவரும் தவநெறியிலே காசிடன் இதில் ைநிற்றல் வேண்டும் அதற்குரிய முறையை பகர்தல் மெய்யாக உணர்த்துவேன்; கேட்பீராக’ என்று - கூறலுற்றார்: அறம் என்னும் பொருள் ஒன்றுண்டு. அஃது அழிவற்ற இம்மை மறுமை இன்பங்களை எளிதாக அளிக்கும். அருமையாகப் பெறுதற்குரியது அவ் வறம் ஒருமைப்பட்ட மனம் உடையவரா லன்றிப் பிறரால் அஃது அறிய வொண்ண்ாது. அறத்தைப் போற்றினால் அன்பு உண்டாகும்; அருள் என்னும் பேறும் வந்தடையும். அவ் விரண்டும் வந்தவுடன் தவம் என்னும் சிறப்புக் கைகூடும். அதன் பின்பு ஞானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/60&oldid=919881" இலிருந்து மீள்விக்கப்பட்டது