பக்கம்:வேலின் வெற்றி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - - - 53 உண்டாகும். ஞானம் பெற்ற உயிர் சிவனோடு இரண்டறக் கலந்துவிடும். ஆதலால், மைந்தர்கள்: அறம் செய்யுங்கள்: பாவத்தை அகற்றுங்கள்; சிவபெருமானைக் கருதிச் சிறந்த தவம் புரியுங்கள். அதுவன்றி, இங்குச் செய்யத் தக்க செயல் வேறொன் நில்லை. உடம்பை ஒறுத்துத் தவம் செய்பவர் உலகமெல்லாம் வியக்க வாழ்வர் தம்மை அடைந்தவரை ஆதரிப்பர் பகைவரை அழிப்பர்; விரும்பிய பொருளெல்லாம் பெறுவர் என்றும் அழிவின்றி இருப்பர். இவ் வுண்மை உங்கள் மனத்தில் நன்கு பதியும் வண்ண்ம் ஒரு சரித்திரம் சொல்கின்றேன், கேளுங்கள் : "மெய்யான வேதங்களை உணர்ந்தவர் மிருகண்டு முனிவர். அவர் காசியை அடைந்து திருக்கோயிலின் அருகே சிவாகம் முறைப்படி நீலகண்டன்ாகிய சிவபெருமானை இனி வழிபட்டு வந்தார். இந் நிலவுலகத்தில் உள்ள *" துன்பம் நீங்கவும், நல்லறங்கள் செழித்து ஓங்கவும், களித்திரம் மாதவ முனிவர்கள் சிறந்து மல்கவும், வைதிக உரைதிதல் ஆ வாழவும், கண்ணற்ற காலன் மாளவும், ஆதிமுதல்வனாகிய சிவபெருமான் திருவருளால், அம் முனிவரின் மனையாள் கருப்பம் உற்றாள். நஞ்சுடைய நாகத்தின் வாய்ப் பட்டு நலிவுற்ற சந்திரன், விடுபட்டு அமிர்தத்தைத் தருவதுபோல் அழகும் பொறுமையும் வாய்ந்த அம் மாது கருப்ப வேதனையால் வருந்தி, வேத மணம் கமழும் செவ்விய வாயினையுடைய குழந்தையைப் பெற்றாள். - - - - மைந்தன் பிறந்தான் என்று கேட்ட முனிவர் கங்கையிலே நீராடினார்; அந்தணர் முதலிய அறவோர்க்குப் பொன்னும் பொருளும் வழங்கினார் செய்ய்த்தக்க சடங்குகளையெல்லாம் செய்தார். அப்போது பிரமதேவன் அங்கு எழுந்தருளி மைந்தனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் இட்டான். அம் மைந்தனுக்கு ஐந்தாம் ஆண்டில் முனிவர் உபநயனம் செய்தார்; ஓதுதற்குரிய கலைகளை யெல்லாம் அவன் உள்ளங்கொள்ள உணர்த்தினார், வேத நூல் முதலாய கலைகளெல்லாம் கூறும் மெய்ப்பொருளை உணர்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/61&oldid=919883" இலிருந்து மீள்விக்கப்பட்டது