பக்கம்:வேலின் வெற்றி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வேலின் வெற்றி சிவபெருமானே ஆதி முதல்வன் என்றறிந்து, அவர் சேவடியைத் தஞ்சமாகக் கொண்டான், மார்க்கண்டன். "இவ்வாறிருக்கையில், மார்க்கண்டனுக்குப் புதினாறு வயது வந்தது. பாலனையும், பதினாறாம். ஆண்டினையும் மாறிமாறி எண்ணிப் பெற்றோர் இருவரும் தனித்தனியே பேதுற்றார்; துன்பக் கடலில் மூழ்கினார் விம்மினார்; அழுதார்; நலிவுற்றார். அதனை அறிந்த மார்க்கண்டன் பெற்றோரை வணங்கி, அருகே சென்று 'நீங்கள் ஏன் இவ்வாறு துன்புறுகின்றீர்கள்? வருந்தத்தக்க காரியம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே துக்கப்படர்தீர்கள் என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள் என்று வினவினான். "இம் மொழி கேட்ட தந்தை, அப்புனே, நீ இருக்க எமக்குத் துன்பமும் உண்டோ? உனக்கு வயது, பதினாறு என்று சிவபெருமான் முன்னமே அருளிச்செய்தார். அவ் வயது வந்துவிட்டதே என்றுதான் வருந்துகிறோம் என்று உரைத்தன்ர். அப்போது, தந்தையின் துன்புற்ற முகத்தை நோக்கி, ஜயனே! நீங்கள் வருந்தாதீர்கள். எல்லா உயிர்க்கும் உயிராகி, என்றும் நின்று நிலவும் பெருமானை வழிபட்டு, கால அவதி என்னும் விதியைக் கடந்து, உங்களிடம் வந்து சேர்வேன். அதுவரையும் இங்கே இருங்கள் என்று பலவாறாகச் சொல்லிப் பெற்றோர் மனத்தைத் தேற்றி, அவர் பாதம் பணிந்து நின்றான். மார்க்கண்டன். அருமந்த மகனை இருவரும் எடுத்தனைத்து, உச்சி மோந்து, துன்பம்.விட்டு இன்பம் அடைந்தனர். - - "இறைவனின் அருளும் அன்புமே உறுதுணையாகக் கொண்டு, உள்ளத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்க, விடை பெற்று விரைந்து போந்து, காசியிலுள்ள மணிகன்றிகை யென்னும் செம் பொன் மயமான சிவாலயத்தை அடைந்தான், மார்க்கண்டன், அன்பினால் என்பு உருக, கண்ணி பொங்கி வழிய, திருக் கோவிலை வலம் வந்தான், ஈசனை வணங்கினான்; அவர் திரு வடியைத் தன் முடியிலே தரித்தான்; ஆலயத்தின் தென்பால் ஓரிடத்தில் ஈசன் திருவுருவை நிறுவினான், பல நாள் அன்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/62&oldid=919885" இலிருந்து மீள்விக்கப்பட்டது