பக்கம்:வேலின் வெற்றி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 55 தொழுது போற்றி அருந்தவம் புரியலுற்றான்; ‘ஐயனே அமலனே! எப்பொருளும் ஆகி நின்ற மெய்ப்பொருளே! பரம்பொருளே! விமலனே தீயேந்திய திருக்கரத்தானே அடியேன், காலன் கைப் படாது கடைத்தேறும் வண்ணம் நேர் நின்று காத்தருளல் வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்பொழுது சிவபெருமான் அஞ்சேல், அஞ்சேல் என்று அபயம் அளித்துத் தம் சேவடி இரண் டையும் அவன் சென்னியிலே சேர்த்தார். உய்ந்தேன் அடியேன் என்று மார்க்கண்டன் போற்றி நின்றான். ஈசன் மறைந்தருளினார். 'அவ் வேளையில் கூற்றுவன் தன் அமைச்சனாகிய கொடிய காலனை அழைத்தான்; அந்தணன் மகன் ஒருவன் காசியில் உள்ளான்; அவன் உயிரைக் கவர்ந்து வா என்று கட்டளை யிட்டான். அப் பணி யேற்ற காலன் நிலவுலகத்தை யடைந்தான்; மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றின்ான் தொழுது நின்றான்; 'நீ யார் என்று அவன் வினவலும், சகல உலகங்களிலும் உள்ள உயிர்களைச் சங்காரம் செய்யும் அதிகாரமுடைய எமதேவனது அடியினைப் பணியும் காலன் யான் என்றான். அது கேட்ட மார்க்கண்டன், யாவர்க்கும் தலைவனாகிய ஈசனாரின் அடியார்க்கு அடியவன் யான், ஆதலால், உமது எமலோகத்திற்கு வரமாட்டேன். பிரமன், திருமால் ஆகிய இருவர் பதவியையும் விரும்பேன்; நீ விரைந்து செல் என்று கூறினான். காலனும், நன்று, நன்று என்று சொல்லிச் சென்றான். "எமலோகம் போந்த காலன், தலைவனை அடி வணங்கி, நிகழ்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தான். அப்போது, எமதருமன் மனம் பதைத்தான்; மேனி வியர்த்தான், கண்களால் கனல் பொழிந்தான்; நெடும் புருவங்களை நிமிர்த்தான்; சீற்றம் உற்றான்; என் எருமை வாகனத்தைத் தருக என்றான்; வந்து எதிரே நின்ற எருமைக்கடாவின் முதுகில் யானைபோல ஏறி அமர்ந்தான். குடையும் கொடியும் எழுந்து முன்னே செல்ல, வீரர் பலர் தொழுத கையினராய்ச் சூழ்ந்து வர வந்தான், எமதருமன், காசியில் மார்க்கண்டன் இருந்த இடத்தை யடைந்தான்; செக்கச் சிவந்த தலையும், காரெனக் கறுத்த மேனியும், எரிவினால் எரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/63&oldid=919887" இலிருந்து மீள்விக்கப்பட்டது