பக்கம்:வேலின் வெற்றி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வேலின் வெற்றி கண்ணும், பாசமும் தண்டும் குலமும் ஏந்திய கைகளும் உடையவனாய் மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றினான். "தேவர் தடுப்பினும், முத்தொழில் புரியும் மூவர் தடுப்பினும், மற்றும் வலிமை சான்றவர் எவர் தடுப்பினும், இன்று உன் உயிரைக் கொண்டே செல்வேன் என்று இடிபோல் முழக்கினான். எமன் வா என்று முறையாக அழைத்தால் இவன் வரமாட்டான் என்றெண்ணி, முன்னே போந்து, பாசத்தை வீசிப் பற்றி இழுத்தான். அதை அறிந்த மார்க்கண்டன் ஈசனைத் துதித்து, அவர் இணையடி பிரியா திருந்தான். அக் காட்சியைக் கண்ட தேவரும், மைந்தன் இறந்தான் அன்றோ என்று மறுகி நின்றார். மதங்கொண்ட எமன், மைந்தனது உயிர்வாங்க முனைந்தான் என்று திருவுளங்கொண்டு திரிபுரம் எரித்த தேவதேவன் சீற்ற முற்றார்; சிறிது, சேவடியால் உந்தி உதைத்தார். கூற்றுவன் கருமேகம் போல் தரையிடைக் கடிது வீழ்ந்தான். - "அந் நிலையில் ஈசன், மைந்தா நீ நம்மைப் போற்றி மாசற்ற பூசனை புரிந்தாய். ஆதலால், அந்தமற்ற ஆயுளை உனக்குத் தந்தோம் என்று அருளினார். அப் பெருமை வாய்ந்த திருமகன் ஆற்றிய தவத்தால் விலக்கலாகாத விதியையும் கடந்தான்; கூற்றுவனது ஆற்றலையும் அழித்தான் என்றும் இறவாத பெரும்பேறு பெற்றான். இது மெய்யான சரித்திரம். இதனை அறிந்துகொள்ளுங்கள்; இன்னமும் சொல்கின்றேன்; தவம் புரியுங்கள்" என்று காசிபன் கூறினான். அப்போது நளினம் வாய்ந்த மாயை நகைத்தாள். - "மாயை யறிந்த முனிவரே நீர் உண்மையாகிய உறுதியைத் மாயையின் தான் கூறினர். அது மேலான வீட்டின்பத்தை நாடும் - முனிவர்களுக்குத் தகுமேயன்றி, நாம் பெற்ற மைந்தருக்கு அந் நெறியைச் சொல்லலாமோ? நம் காதல் மைந்தர்கள், சிறந்த பெருஞ்செல்வமும், குற்றமற்ற வெற்றியும் பெறுதல் வேண்டும்; வாழ்க்கையில் ஐம்பொறிகளால் அனுபவிக்கத் தக்க இன்பமெல்லாம் அடைதல் வேண்டும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/64&oldid=919889" இலிருந்து மீள்விக்கப்பட்டது