பக்கம்:வேலின் வெற்றி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 57 அழிவற்ற ஆயுளும் நிலைபெற்ற புகழும், மாசிலா வாழ்வும் பெறுதல் வேண்டும். இவ் வுலகிற் பிறந்த உயிர்க்கெல்ல்ாம் பெருமை யளிக்கும் சிறந்த பொருள்கள் இரண்டு ஒன்று கல்வி, மற்றொன்று செல்வம். இவற்றின் திறத்தை ஆராய்வோமாயின், அருமையான கல்வியினும் செல்வமே சிறந்ததென்று சொல்லத் தகும். செல்வமே அளவிறந்த கலைஞானத்தையும் மேன்மையை யும் அளிக்கும்; அறத்தையும் ஆன்ற புகழையும் ஈட்டும்; கொற்றமும் பிறவும் கூட்டும். ஆதலால், செல்வத்திற் சிறந்தது வேறொன்றில்லை என்று முனிவரை நோக்கி மாயை கூறின்ாள். பின்பு அவள், ! மைந்தர்களை நோக்கி, "எனவே, ജ്ഞഥ மைந்தர்காள் திருமாலும் பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் இறைவன் என வணங்கும் ஈசனைப் போற்றி, வெம்மை சான்ற வேள்வியை நெடுங்காலம் செய்வீராக!" என்றான். - அது கேட்ட அசுரர் தலைவனாகிய சூரன், ஈன்ற தாயையும் தந்தையையும் தொழுது போற்றினான்; அவரிடம் விடை பெற்றுத் தம்பியர் இருவரோடும் வேள்வி செய்யப் புறப்பட்டான். அன்னவர் சென்ற பின்னர், மோகமுற்றுத் தன் அருகே நின்ற முனிவரை நேர்க்கி, "ஐயனே! நான் மைந்தரைப் பாதுகாப்பதற்குச் செல்கிறேன். நீர் மனக் கவலை ஒழிக" என்று கூறி மாயை பிரிந்து போயினாள். அசுரர் குலத்திற்கு ஆக்கம் தரும் வேள்வி செய்யுமாறு சூரன் .. ,. வடதிசையிற் போந்தான், ஆலமரங்கள் நிறைந்த ఆస్ట్తో ஒரு வனத்தின் அருகே வெய்யதோர் வேள்வி - செய்யக் கருதினான்; பதினாயிரம் யோசனை அளவு கொண்ட நிலத்தை உயர்ந்த மதிலால் வளைத்தான்; மூவகைப்பட்ட ஒமகுண்டங்களும் அமைத்த பின்பு வேள்வி இயற்றுதற்கு வேண்டும் பொருள்களெல்லாம் தரும்படி தாயாகிய மாயையை மனத்திலே நினைத்தான். அவளும் அன்பு கொண்டு சிவனருளால் அப் பொருள்களைச் சேர்ப்பித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/65&oldid=919891" இலிருந்து மீள்விக்கப்பட்டது