பக்கம்:வேலின் வெற்றி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வேலின் வெற்றி சூரன். ஒமகுண்டத்தை அடைந்து, முறையாக அர்ச்சனையெல்லாம் குறைவின்றிச் செய்து, மங்கை பங்கனாகிய ஈசனை மனத்தில் எண்ணி, மாசற்ற மகம் புரிவானாயினான் நெடுங்காலமாக வேள்வி செய்தும் ஈசன் அருள் புரிந்தாரல்லர் அதனை அறிந்த சூரன், "இதற்கெல்லாம் சிவபெருமான் இசைந்து அருள் செய்வாரோ?" என்று கூறி, வேள்வித் தொழிலைத் தம் யரிடம் விட்டு வானவர் அச்சம் கொள்ள, விண்ணிலே எழுந்தான் அங்கே நின்று, சூரன் தன் உடம்பிலுள்ள தசையையெல்லாம் வாளால் அறுத்து வேள்வித்தீயிலே அவிர்ப்பாகமாகச் சொரிந்தான் மழைபோல் குருதியை நெய்யாகப் பொழிந்தான். இவ் வண்ணம் ஆயிரம் ஆண்டுகளாக ஆகாயத்தில் நின்று ஆகுதி செய்தும் தேவதேவன் தோன்றினார் அல்லர். அது கண்டு சூரன் மனம் வருந்தி, இனி மாண்டுபோவ்தே என் கடன் எனத் துணிந்தான் அவ்வாறே நெருப்புச் சூழ்ந்த ஆதிகுண்டத்தில், தாயாகிய மாயையின் தவ வலிமையால் எரியாது நின்ற கூரிய நுனியுடைய வச்சிர கம்பத்தின்மேற் குதித்தான். தம்பியராகிய சிங்கமுகனும் தாரகனும், முன்னவன் முடிந்தது கண்டு, எங்கி அழுதார்கள். இருவர் துயரத்தையும் தம்பியர் அறிந்த அசுரர் யாவரும் பொங்கும் கடல்போல் புலம்பல் பொருமிப் புலம்பினர். அப்பொழுது அசுரர்களோடு அழுது சோர்ந்த சிங்கமுகன், "அந்தோ என் உயிராகிய தமையன் இறந்தான்; இனி நான் இங்கு இருத்தல் தகுமோ?" என்று எண்ணி நெருப்பிலே குதிக்க எழுந்தான். - அது கண்ட சிவபெருமான், திருமால் முதலிய தேவர்கள் இக வியத்துத் திருவெண்ணெய்நல்லூரில் சுந்த "ஆ, மூர்த்தியைத் தடுத்தாட்கொள்ளு வந்தாற்போன்று வரர் *> விருத்த வேதிய ഖിഖുകെrങ്ങി. தண்ன்ேறி நடந்து நதரு வந்தார். அங்கு அமைந்த ஓம குண்டத்தின் அருகே சென்று, சிங்கமுகனை நோக்கி, "இங்கு எல்லோரும் வருந்து கின்றீர்களே! என்ன நேர்ந்தது?" என்று வினவினார். நிகழ்ந்த வற்றையெல்லாம் சிங்கமுகன் சொல்லக் கேட்ட பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/66&oldid=919893" இலிருந்து மீள்விக்கப்பட்டது