பக்கம்:வேலின் வெற்றி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ - * , -வேலின் வெற்றி சிவகணங்களின் உதவியால் சென்று கண்டு, அங்குள்ள வானவரையெல்லாம் வென்று, அவர் செல்வங்களைக் கவர்ந்து தன்னுடன் இருந்த பலரை அங்கு அரசாள வைத்தான், சூரன். சூரனது சிறப்பெல்லாம் அறிந்த அசுரேந்திரன், உயிரைப் பிரிந்த உடல் மீண்டும் வந்து பொருந்தினாற் "), போன்று தன் சுற்றத்தாருடன் எதிர்கொண்டு ಆ ಧ கை கூப்பித் தொழுதான். அது கண்ட சூரன், "ஜயனே! நீ சுகம்ாக இருக்கின்றாயா?" என்று வினவினான். "அசுரர் குலம் விளங்கத் தோன்றிய அரசே! நீ யிருக்க எமக்குத் தின்மை யுண்டோ? தாழ்வுண்டே?” என்று இனிய மொழி பேசி அசுரேந்திரன் அவன் அருகே சென்றான். வெற்றி மாலை சூடிய சூரன், அசுரர் சேனையோடு நிலவுலகத்திற்கு விரைந்து திரும்பினான். அங்குத் திருமால் முதலிய தேவரும் முனிவரும் சூரனை எதிர்கொண்டு அழைத்து ஆசி கூறி அன்போடு போற்றினர். அவர்களோடு கலந்து நின்ற பதினொரு கோடி ருத்திர கணங்களை நோக்கினான், சூரன். "உலகத்தைப் படைத்த பிரமதேவனிடம் பதினொரு உருத்திரர் தோன்றினர். அன்னார் மேற்புவனத்தில் இருந்தார். அவர் படைத்த பவர் முதலிய பதினொருகோடி ருத்திரர்களே இவர்கள், ஈசன் அருளால் வானவர் இனத்தில் சேர்ந்து வந்துள்ளார்" என்று திருமால் சொல்லக் கேட்ட சூரன், "இதுவோ இவர் வரலாறு" என்று கூறினான். பின்பு, அங்கு நின்ற தேவதச்சனை நோக்கி, "அறிஞனே, , , நாம் வசித்தற்கு ஏற்ற நகரத்தை விரைவிலே விமகேந்திர ஆக்குக" எனச் சூரன் ് சிற்ப நூல்களிற் * சொல்லிய முறைகளை ஆராய்ந்து மாமேரு மலை போன்ற நான்கு கோபுர வாயில்கள் அமைத்து, நூறு யோசனை நீளத்தில் பல மாடவீதிகள் வகுத்து, இன்னும் மன்ன்ரது இயல்புக் கேற்ற மற்றவற்றையும் உண்டாக்கி, நகரின் நடுவே சூரனும் அவன் தேவியும் வசிப்பதற்கு ஒரு மாளிகையும் திருமித்தான், தேவதச்சன் நீலமலரும் குமுதமும் கமலமும் நெருங்கிப் பூத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/76&oldid=919914" இலிருந்து மீள்விக்கப்பட்டது