பக்கம்:வேலின் வெற்றி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 67 படியே ஏவல் செய்வோம்," என்று சொல்லித் தொழுது நின்றார்கள். குரனும், அவர் செய்கையை மெச்சி அகமகிழ்ந்தான் கட்டவிழ்த்து விடுவித்தான்; "இனி நாம் ஏவிய பணியைச் செய்து வாழ்க!" என்று கூறி விடை கொடுத்தான். பின்பு, கல்வி கேள்விகளிற் சிறந்த மார்க்கண்டன் முதலிய மாதவத்தோர் வாழும் மகலோகம், சனலோகம், தவலோகம் என்னும் மூன்று உலகமும் போற்றச் சூரன் பிரமலோகம் போந்தான். அதையறிந்த பிரமதேவன் நடுக்கமுற்றான். பெருங்கடல் போன்ற சேனைகளின் நடுவே வந்த சூரனிடம் போந்து, “அரசே வாழ்க! வாழ்க!" என்று ஆசி கூறினான். "மன்னவா இங்கு நீ வருவதற்கு. நான் என்ன மாதவம் செய்தேனோ அத் தவத்தின் தன்மையை ஆதிசிவன் ஒருவனேயன்றி யாவரே அறிய வல்லார்" என்று பேசிய பிரமனிடம் அன்பு கூர்ந்தான், சூரன், பிரமலோகத்தில் அவனை இருக்கும்படி பணித்து, துளவமாலை யணிந்த திருமால் வீற்றிருக்கும் வைகுந்தம் போந்தான். சூரனைக் கண்ட மாயேரின் எழுந்து வந்து, "நெடிது வாழ்க’ என்று எல்லையற்ற ஆசி கூறினான். பின்பு, திருமால், பிரமன் முதலாக்வுள்ள தேவர்க்குரிய ஆணை யெல்லாம் அளித்தருளி, தேவ தேவனது சிவலோகத்தை அணுகினான், சூரன், தன் பரிசனங்களை யெல்லாம் ஓர் எல்லையில் நிறுத்தித் தம்பியர் இருவரோடும் திருக்கோயிலை நோக்கி நடந்தான். ஈசனது கோயி லின் கடைவாயிலில் நின்ற சூரனை ஆணைப்படி நந்தி தேவர் உள்ளே செல்லவிட்டார். காந்தள் மலர் போன்ற கைகளை யுடைய கவுரிதேவியோடு வீற்றிருந்தருளும் கண்ணுதற் கடவுளை அணுகி, அன்புடன் அடி பணிந்து போற்றி நின்றான், அசுர மன்னன். நீலகண்டனாகிய பெருமான், அருள் கூர்ந்து சூரனை நோக்கி, "நீ மற்றைய அண்டங்களையும் கண்டு, நம் ஆணையால் எத் திசையும் புகழ இனிது அரசாள்க’ எனத் திருவாய் மலர்ந்தார். அது கேட்ட அசுரர் கோமான், ஐயன் மலரடி பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டான். ஈசன் பணித்தவாறே ஏனைய அண்டங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/75&oldid=919912" இலிருந்து மீள்விக்கப்பட்டது