பக்கம்:வேலின் வெற்றி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 -வேலின் வெற்றி இதுவாயின், உனக்கு மூத்தவராய் அங்கே நிற்கும் வீரரது பெருமையை யாவரே விரித்துரைக்க வல்லார்? ஈசனார் மகிழும் வண்ணம் நெடுங்காலம் கனல் வேள்வி செய்து வரம் பெற்றுள்ளி உங்களினும் வலிமை பெற்ற அசுரர் இவ் வுலகில் எவரும் இலர். ஆதலால், உம்மை வெல்ல வல்லவரும் உண்டேர், இனி எனக்கு நீர் உறவினர்" என்று மங்கல முறையில் அளவற்ற ஆசி கூறிச் சென்றார், திருமால். திருமால் சென்ற பின்னர், வெற்றி மாலை சூடிய தாரகன் வேறொரு தேர்மீது ஏறினான்; சூரன் முன்னே சென்றான். அவனும் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்து, மன மகிழ்ந்து, தம்பியைத் தழுவிக்கொண்டான். அப்பால் அசுர சேனை புறப்பட்டது. இவ்வாறு எழுந்த சேனை சுவர்க்க லோகத்தை அடைந்தது. ஒற்றர் சிலர் ஓடிச்சென்று, சூரன் வந்தான் என்று இந்திரனிடம் அறிவித்தார்கள். அந் நிலையில் இந்திரன் அஞ்சினான்; பெருமூச்செறிந்தான்; பொருமித் தேம்பினான்; அறிவழிந்து சாம்பினான்; மனத் திண்மை இழந்து மேல்விளைவினை எண்ண லுற்றான்; இங்கு வந்திடும் சூரனெதிரே சென்று முறையாக யான் போர் புரிந்தால், இவ் வுயிரை இழப்பேன்; அல்லது இறவா திருந்தால், இடர்க்கடலில் வீழ்ந்து மாயாப் பழியில் மூழ்குவேன் என்று இந்திரன் நினைந்து விரைந்து எழுந்தான்; இந்திராணியோடு குயில் வடிவங் கொண்டு வானத்திற் பறந்து போயினான். பகைவர்கள் அவ் விருவரையும் எங்கும் தேடினார்; காணாராயினார். அகப்பட்ட தேவர்களை அசுரர்கள் பிடித்தார்கள்; கலங்க அடித்தார்கள், கைகளாற் குத்தினார்கள்; அன்னார் பெருந் தோள் நெரிய மேலாடைகளால் நெருக்கி இறுக்கினார்கள். இரக்க மற்ற அசுரர், வானவரை இங்ங்ணம் வருத்திச் சூரன் முன்னே கொண்டு நிறுத்தினர். அந் நிலையில் அன்னார் அவனை வணங்கி, "ஐயனே! இன்றுமுதல் என்றும் எமக்கு அமைந்த தெய்வம் நீயே! எம்மைக் காக்கும் மன்னனும் நீயே! பற்றுடைய சுற்றமும் நீயே! இனி, நாங்கள் அனைவரும் நின் ஆணையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/74&oldid=919910" இலிருந்து மீள்விக்கப்பட்டது