பக்கம்:வேலின் வெற்றி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 65 செய்த ஆரவாரத்தைக் கேட்டு மங்கையர் இருவரும் வேர்த்து விதிர்விதித்தனர். அச்சமுற்று அஞ்சன வண்ணனைப் பற்றிக் கொண்டனர். அந் நிலையில் உறக்கம் தெளிந்தார், திருமால், அஞ்சேல் என்று இருவருக்கும். அபயம் அளித்தார்; தம் வாகனமாகிய கருடனை நினைத்தார். அவர் நினைப்பதற்கு முன்னே வலிமை சான்ற கருடன் அங்கு வந்தடைந்தான். அவன் தோள்மீது அரிமான்போல் ஏறினார், திருமால் சங்கு சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐம்படையும் கொண்டு அசுர சேனையின் எதிரே சென்றார். கார்மேக வண்ணனாகிய திருமால், கருடவாகனராய், மண்ணுலகத்தைச் சூழ்ந்த கடல் போன்ற அசுரப்படையை வளைந்து சுற்றி, எண்ணிறந்த மாயா வடிவம் காட்டி, பகைவர் ஏவரும் தப்பிப் போகாத வண்ணம் அம்பு மாரி பொழிந்து போர் புரிந்தார். ೫5) கண்ட தேவர் ஆரவாரித்தனர். இவ்வாறு கொலைப் போர் புரியும்போது தாரகன் சீற்றமுற்றுப் போர்க்களத்தை நோக்கினான்; சிதறியோடும் சேனையை அஞ்சேல் என்று தேற்றினான், மேரு மலை போன்ற வலிய வில்லைக் கையில் எடுத்தான் இடியென முழங்கும் குதிரை பூண்ட தேர்மீது ஏறி நொடிப்பொழுதில் வந்தான். வந்த தாரகன்மீது திருமால் அம்பு மாரி பொழிந்தார். அவற்றை ஒரு தண்டால் விலக்கித் தள்ளினான், தாரகன்; சீற்றம் கொண்டு முன்னேறினான். அது கண்ட திருமால், நேமிப் படையை எடுத்து விடுத்தார். இமை கொட்டும் நேரத்தில் உலகெலாம் அழிக்கும் தன்மை வாய்ந்த அப் படை சென்று தாரகன் கண்டத்தை அணுகிற்று. ஆயினும், சிவபெருமான் அளித்த வரத்தின் செம்மையால் அஃது அவன் கழுத்தில் ஒரு பொன்னாரமாக விழுந்தது. ஆஹா தவத்தினும் வலிய தொன்றுண்டோ? "வலிமை வாய்ந்த தெய்வப் படை யாகிய நேமியே மணியாரமாயிற் றென்றால் வெற்றி உனதேயாகும்; இனிச் செய்யும் போரும் உண்டோ? இளையோனாகிய, உன் திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/73&oldid=919908" இலிருந்து மீள்விக்கப்பட்டது