பக்கம்:வேலின் வெற்றி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வேலின் வெற்றி ஆணையை மேற்கொண்டு நின் பரிவாரங்களுடன் ஈண்டு வாழ்க என்று பணிந்து மேலே சென்றான். கூற்றுவன் வலியிழந்து குறுகிய தனமையையும், அவள் பணிந்து சென்ற பான்மையையும் மன்த்தில் எண்ணி மகிழ்ந்த சூரன், தென்மேற்றிசையில் உள்ள நிருதியின் நகரை நோக்கினன் மாற்றான் வலிமையையும் தன் வலிமையையும் மனத்தில் எண்ணி மகிழ்ந்த சூரன் அந் நகரை நாடி விரைந்தெழுந்தான். சூரன் வலிமையும், தன் வலிமையும் மனத்தில் சீ துக்கி ஆராய்ந்த நிருதி, தன் சேனையோடு சென்று துதித்தான்; அவனடி பணிந்தான்; "நான் உன் உறவினன்" என்றான்; அதற்கு அடையாளமாகத் தாரகன் அருகே சென்று நின்றான். இவ்வாறு நெருங்கிய உறவு பூண்ட நிருதியின் நகரைவிட்டு நீங்கினான். அசுரர் கோமான். சூரன் வருவதையறிந்த வருணதேவன் கருங்கடலிற் புகுந்தான் வாயுதேவன். இருளுலகில் ஒளிந்தான். இருவர் நகரையும் சூரன் குறையாடினான்; கொடுமையெல்லாம் விளைத்த்ான்; அப்ப்ால் ஏழு வக்ைப்பட்ட பாதாளலோகம் புகுந்தான் அங்குள்ள அசுரர் முதலியர். அனைவரும் வணங்கினர். அவர்க்கு அருள் செய்து மேலும் சென்றான் சூரன்; ஆதிசேடனது உலகத்தை அணுகினான். அவன் சீற்றங்கொண்டு எழுந்தான் போர் புரிந்தான். அவன் சேனையை அசுரர் படை வென்றது. அந் நிலையில் ஆதிசேடன், சூரனை வியந்து போற்றினான். அவன் நகரத்தில் ஒரு நாள் தங்கினான், சூரன். தேவர்கள் ஆதிசேடனிடம் அடைக்கலமாக ஒப்புவித்திருந்த அமிர்தத்தை அப்போது குரன் வற்புறுத்தி வாங்கினான், மெய்யன்பு வாய்ந்த தம்பியரோடு அதனை இன்புற்றுப் பருகினான்; அந் நகரை விட்டுச் சென்றான். பூவுலகத்திற் போந்து, உவர்க்கடலையும் தீவகத்தையும் கடந்து, சேனைப் பெருங்கடல் சூழ்ந்து வரச் சூரன் சென்றான். திருமகளும் நிலமகளும் துதிக்கப் பாம்பனையிற் பள்ளி கொண்டு திருமால் கண் வளரும் திருப்பாற்கடலை அடைக்கான். அசுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/72&oldid=919906" இலிருந்து மீள்விக்கப்பட்டது