பக்கம்:வேலின் வெற்றி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 63 சேனையோடு அங்கித்தேவன் வாழும் நகரத்திற்குச் செல்லலுற் றான். "அசுரர் சேனைப் பெருங்கடலை வற்ற வைத்து அழிப்பேன்" என்று அங்கித்தேவன் அவ் வெள்ளத்தை நெருங்கி வளைத்து எரிக்கத் தொடங்கினான். அதைக் கண்டு சீறினான், தாரகன்; தேர்மீது ஏறினான்; காற்றினும் கடிது சென்றான்; எரித்திடும் அங்கியை எதிர்த்தான்; கையில் வில்ல்ை எடுத்து வளைத்தான். அதனைக் கண்டான், அங்கித்தேவன், "இவன் வில்லில் அம்பு தொடுப்பானாயின் இன்றே உலகமெல்லாம் ஒழிந்திடும் என்னுயிரும் முடிந்திடும்; பிரமன் முதலிய வானவர் குலமெல்லாம் மடிந்திடும்" என்று வருந்தினான்; சினம் அடங்கி ஒடுங்கினான்; துயரமுற்று நடுங்கினான், கரம் குவித்து வணங்கித் தாரகன் முன்னே விரைந்து போந்தான்; "பிழை பொறுக்க வேண்டும்" என்றும் போற்றி நின்றான். - ஈசனுடைய பாசுபதப் படையை ஏந்தி நின்ற தாரகன் பொறுத்த்ான்; சீற்றம் விடுத்தான்; மகிழ்ச்சியுற்றான். அசுரர் சேனையை விலக்கி, அங்கித்தேவனை நோக்கி, "நீ எமக்கு ஏவல் செய்திடுக; உன்னுயிரை உனக்குத் தந்தேன் இன்ன்ே நின் நகரத்திற்குச் செல்க" என்றான், தாரகன். - அசுர சேனை ஆரவாரித்து எழுந்து சென்றது. வெற்றி முரசம் வீறிட்டு ஒலித்தது; எங்கும் கரிப்படையும் தேர்ப்படையும், பரிப் படையும் நெருங்கி நடந்தன; அவை எழுப்பிய தூசி கடலைத் துர்த்தது; அசுரக் கொடிகள் ஆகாயத்தை அடைந்தன, கொடி யேந்திய முன்னணிப் படை முந்திச் சென்று எமனுடைய நகரத்தை அடைந்தது. அது கண்ட எமன், தெளிந்த மனத்தோடு எழுந்தான். எருமைக் கடாவின்மேல் ஏறினான்; சுருங்கிய சேனை சுற்றிச் செல்ல, இமைப் பொழுதில் சூரனிடம் போந்தான் போற்றினான்; தொழுதான் ஆசி கூறினான். சிறப்பு வாய்ந்த எமனது செய்கையை நோக்கினான், சூரன், அன்பு கூர்ந்து இன்பமுற்றான், "நமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/71&oldid=919905" இலிருந்து மீள்விக்கப்பட்டது