பக்கம்:வேலின் வெற்றி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - வேலின் வெற்றி வாழ்வீராக!" என்று கூறி மாயை சென்றாள். மைந்தர் அவளை வணங்கி நின்றார். பின்பு, சூரன் அசுரரை அழைத்து, "கோடி தேருடன் நமது சேனை குபேரன் நகரத்திற்குச் செல்லுதல் வேண்டும்; விரைவில் முரசறைக" எனப் பணித்தான். பெரும்படை திரண்டு எழுந்தது. அப்போது, பூமி குரன் திக்கு நடுங்கிற்று பூமியைத் క్రైు ஆதிசேடன் விசயம் செய்தல்." நடுங்கிற்று ഖങ്ങഥ நஇங்கிற்று - எட்டுத்திசையும் நடுங்கிற்று, மலையெல்லாம் நடுங்கிற்று கடல் நடுங்கிற்று கனலும் நடுங்கிற்று. இவ்வாறாகச் சென்ற சேனையோடு சூரன் குபேரனது நகரமாகிய அளகாபுரியை வளைந்தான்; அதையறிந்த தூதுவர் விரைந்து பொன்ன்களின் மன்னனிடம் போந்தனர். தூதுவர் சொல்லிய் செய்தி கேட்ட குபேரன் துன்பமுற்றான். துணுக்கம் உற்றான். "அசுரரை நாம் வெல்லுதல் அரிது. அன்னர் ஈசனிடம் வரம் பெற்றுள்ளார். ஆதலால், அவரைப் புகழ்ந்து ஆசி கூறிப் போற்றுதலே முறை" என்று எழுந்து சென்றான். புஷ்பக விமானத்தின் மேல் ஏறிப் போந்து, சூரன் முன் நின்று வணங்கித் துதித்தான் அளவற்ற ஆசி கூறி, "யான் உமக்கு அடியன் என்றான். அது கேட்ட சூரன், "இங்கு நீ இனிது வாழ்க" என்று கூறியனுப்பினான். - . அப்போது அசுரர்கள் அளகாபுரியின் உள்ளே புகுந்தார்கள் பொன்னும் மணியும், விமானங்களும் வேறுள்ள படைக்கலங்களும், தேரும், குதிரையும், யானையும் கவர்ந்து சென்றார்கள். அளகாபுரியை விட்டுக் கீழ்த்திசையின் கோடியிலுள்ள ஈசான நகரத்தை அடைந்தான், சூரன், இது நீலகண்டனாகிய சிவபெரு மானது சாரூபத்தைப் பெற்ற ஈசானமூர்த்தி வாழும் வளநகர் என்று அறிந்தான்; அந்த நகரத்தை விட்டு, அசுர சேனையோடு சூரன் சீற்றமுற்றுக் கீழ்த்திசையில் உள்ள இந்திரன் நகரத்தை அடைந் தான். அதனை யறிந்த இந்திரன் விண்ணுலகத்திற்குப் போய் விட்டான். அப்போது சூரன் அந் நகரத்தைச் சுட்டெரித்து அசுரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/70&oldid=919903" இலிருந்து மீள்விக்கப்பட்டது