பக்கம்:வேலின் வெற்றி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை 61 அவனை அடைத்துக் கொடுமைகள் பலவும் செய்திடுக. வேதம் ஒதும் முனிவரையும் தேவரையும் திக்குப் பாலகரையும் தினந்தோறும். ஏவல் கொண்டிடுக. அவர் பதவிகளையெல்லாம் பறித்து அசுரர்க்கு அளித்திடுக. கொலை, களவு, காமம் என்னும் மூன்றும் குறிக்கொண்டு செய்க. வஞ்சனை யெல்லாம் இயற்றிடுக. அதனால் வரும் கேடொன்றும் இல்லை. அவ்விதம் செய்யாவிடில், அரசே, நீ கருதியனவெல்லாம் கைகூட மாட்டா. அன்றியும் எவரும் உனக்கு அஞ்சமாட்டார்கள். வளமான துளசி மாலையை முடியிலே அணிந்த திருமாலை இடப வாகனமாகவுடைய சிவபெருமின் தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டையும் இன்றே சேனையோடு சென்று கண்டு, அங்கு உன் அரசுரிமையைச் செலுத்தி, மீண்டு வந்து, இவ் வண்டத்திலே திக்கெலாம் புகழ வீற்றிருப்பாயாக’ என்று கூறினார். குருவின் வாசகத்தைக் கேட்டு மகிழ்வுற்ற சூரன் அவரிடம் விடை பெற்றுச் சென்றான். சிவபெருமான் அருளால் மைந்தர் மூவரும் பெற்ற மாயையின் பெருவுரங்களையும் ഖജിങഥങ്ങഥ மனத்தினுள்ளே தேசம் நினைத்து, . மிகுந்த அன்புடன் மாயை வானத்தில் வந்து தோன்றினாள். தாயைக் கண்ட சூரன், தம்பியரோடும், தங்கையாகிய அசமுகியோடும் சென்று அன்புடன் வணங்கினான். அப்போது மாயை அவரைப் பெற்ற ஞான்றினும் பெருமகிழ்ச்சியுற்று, ஆசி கூறினாள் "மைந்தர்காள் நீர் வேள்வியாற்றிய விதமும், ஈசன் நுமக்கு அளித்த வரமும் கேள்வியுற்றேன்; உம்மைக் காண விருப்புற்று வந்தேன். இந்திரன் முதலிய தேவரையெல்லாம் உமது வலிமையால் வெல்வீராக! வெற்றி பெற்ற பின்னர் எல்லா வுலகங்களையும் ஆண்டுகொண்டு நிலவுலகில் நீடுழி வாழ்வீராக. மாயம் புரியவேண்டுமாயின் என்ன்ை மனத்தில் அன்போடு நினைத்தால், உடனே யான் வந்து நீர் விரும்பியவற்றைச் செய்து முடிப்பேன். நெடுங்காலம் உம்மை நான் பிரிந்திருக்கலாற்றேன். அன்புடன் யானே வந்து பன்முறை காண்பேன். நீவிர் மூவரும் வேற்றுமையின்றிக் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/69&oldid=919899" இலிருந்து மீள்விக்கப்பட்டது