பக்கம்:வேலின் வெற்றி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வேலின் வெற்றி ஈசன் கருணை கூர்ந்து, "பிருதிவி தத்துவத்தில் ஆயிரங் கோடி அண்டங்கள் உண்டு; அவற்றுள் ஆயிரத்தெட்டு அண்டங் களை நூற்றெட்டு யுகம் நீ அரசாள்வாயாக" என்று வரம் தந்து, அவ் வண்டங்களைப் பார்த்து வருவதற்கு இந்திரஞாலம் என்னும் தேரும் வழங்கின்ார். மேலும், அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் காக்கும் வண்ணம் திருமாலின் நேமிப்படையினும் வலியதேர் ஆழிப்படை அளித்தார்; சிங்கவாகனமும் தந்தார்; வானவர்க்கும் தலைவனா யிருக்கும் தகுதியை வழங்கினார், விண்ணுலகில் வாழும் வானவரையும், தானவர் முதலிய யாவரையும் வெல்லுதற் குரிய வீரமும் பாசுபதம் முதலிய சிறந்த தெய்வப்படைகளும், என்றும் அழியாமல் ஏற்றமுறும் வச்சிர மேனியும் அளித்தார். பின்னர், சூரன் முதலிய மூவரையும் நோக்கி, "தேவர் எல்லாம் வந்து வணங்கும் மூவர் ஆகிய உம்மை ஈறிலாத நம் சக்தி யொன்றே யன்றி, யாவரே வெல்ல வல்லார்’ என்று திருவாய் மலர்ந்து, அழிவற்ற தேரும், தம் பெயர் தாங்கிய தெய்வப்படையும் கொடுத்து, மூவருக்கும் தனித்தனி அருள் புரிந்து, ஈசனார் மறைந் தருளினார். வரம் பெற்ற சூரன், தம்பியரோடு வேள்விச் சாலையினின்று புறப்பட்டான். அசுரப்படை மண்ணும் விண்ணும் எண்திசையும் நெருங்கிச் சென்றது. சூரன் வரம் பெற்று வருதலை அறிந்தார், சுக்கிரன்; வாட்டம் _. நீங்கினார்; இன்பம் என்னும் மதுவை உண்டார்; ఆస్ట్లో ஆசையோடு விரைந்தெழுந்தார், மாணவ கணங்க ான ளோடு சூரனை எதிர் கொண்டார். அடி பணிந்து உபதேசித்தல் எழுந்த சூரனை அன்புடன் நோக்கி, "வரம் பெற்றுயர்ந்த வீரனே! உனது மேன்மையை உணர்ந்து நீயே பிரமம் என்று தெளிக, பிரமன் முதலிய தேவர்களே மேலோர் என்று பணிதலை ஒழிக. வானவர் உம்முடைய குலப்பகைவர். அன்னார் செல்வத்தை அழித்து, அவரைச் சிறையில் இடுக இந்திரன் என்பவன் வானவர்க்கு அரசன் எண்ணிறந்த அசுரரின் உயிர் கவர்ந்தவன் அவனே. அவனைப் பிடித்து. விலங்கினாற் பிணித்து விரைவிலே சிறையிடுக. சிறைக் கோட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/68&oldid=919897" இலிருந்து மீள்விக்கப்பட்டது