பக்கம்:வேலின் வெற்றி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வேலின் வெற்றி சிங்கமுக அசுரனுக்கு எமதருமன் திருமகளாகிய விபுதை என்னும் மங்கையை வதுவை செய்வித்தான்; நிருதியின் புதல்வியான சவுரி என்னும் நங்கையைத் தாரக அரசனுக்குத் திருமணம் புரிவித்தான். பின்பு சூரன், தம்பியர் இருவரையும் நோக்கி, "நீங்கள் உங்களுக்குரிய வளநகரம் போந்து இருகோடி வெள்ளமாகிய சேனைகளோடு இனிது வாழ்வீராக” என்று விடை கொடுத்து தம்பியர் இருவரும் தத்தம் நகரத்திற்குச் சென்ற பின்னர், தருமகோபன், துர்க்குணன், துன்முகன், சங்கபாலன், வக்கிரபாலன், மகிடன் முதலியோரை மந்திரிகளாகக்கொண்டு, வானவர் போற்ற . வீரமகேந்திரத்தில் விற்றிருந்து சூரன் அரசு செய்தான். - இங்ங்ணம் மலைபோல் உயர்ந்த மாடங்களையுடைய வானவ மகேந்திரபுரத்தில் சூரன் அரசு செய்யும்பொழுது, ட்ைபணி இந்திரனும் வானவரும் முனிவரும் அங்குப் போந்து, அவன் ஏவுவதற்கு முன்னமே குறிப்பறிந்து - நடப்பாராயினர். இவ்வாறு, வானவர் ஊன்முற்றவர். போல் உலைவுற்றுப் பணி செய்து வரும்பொழுது, ஒரு நாள் இந்திரனையும் வானவரையும் சூரன் வரவழைத்து, "நீங்கள் அசுரர்க்குத் தம்பியர் அல்லரோ? அந்த முறையால் அவர் பணி உமது பணியன்றோ? தினந்தோறும் நீங்கள். அலைகடலிற் போந்து அங்குள்ள மீன்களையெல்லாம் அள்ளிவரக் கடவீர்” என்றான். அம் மொழி கேட்ட வானவர், மனம் நடுங்கினார் மயங்கின்ார். மானத்தால் குறுகினார். கடல் மீனைக் கவர்ந்துவரக் கட்டளை யிட்டானே, காவலன் இனி என்ன செய்வோம்! இப்படியும்.பிரம தேவன் நம் தலையில் விதித்தானே என்று ஏங்கினார் அரசன் ஆணையை மறுத்தற்கு அஞ்சிப் பணிசெய்யப் புறப்பட்டார். . கடலை நோக்கி வழி நடந்து செல்லும்போது, வானவரும் இந்திரனும் வருந்தி ஏங்கினார்: "இப் பணி புரிதல் நமக்குத் தீராப் பழியன்றோ? இவ்வசை வந்தடையும் முன்னே உயிர் விடுதல் சாலவும் நன்று அந்தோ! சாவும் நம்மைச் சாராதே என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/78&oldid=919918" இலிருந்து மீள்விக்கப்பட்டது