பக்கம்:வேலின் வெற்றி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் σπ. 2. சேதுப்பிள்ளை 71 செய்வோம்" என்று மனம் வெதும்பின்ார், புலம்பினார். கடற் கரையை வநதடைநதனா. அந்த வேளையில், இந்திரன் வருண தேவனை அழைத்து, ‘ஐயனே கருங்கடலின் பெருந்தெய்வம் நீயே அன்றோ? உன் னிலும் வலியார் இவ் வுலகத்தில் உண்டோ? உன் கைத்திறத்தால் திமிங்கிலம் முதலிய கணக்கற்ற மீன்களை இக் கடற்கரையில் ஏற்றுவாயாயின் எம்மை இடர்க் கடலினின்றும் கரையேற்றியவன் ஆவாய்" என்றுரைத்தான். வருணன் அதற்கு இசைந்து, பெருங் கடற்கரையிலே மீன்களை அடுக்கடுக்காகக் கொண்டு குவித்தான். அப்போது தேவர்களை நோக்கி, "இவற்றை இனி எடுத்துச் செல்லுதல் உமது பணியாகும்" என்று ஏவினான், இந்திரன். வானவர், உடல் நடுங்கினர், உளம் பதைத்தனர் கண் கலங்கினர்; நாணத்தால் நலிந்தனர், "தேனார்ந்த கற்பகத்தின் திருநிழலில் இன்புற்று வாழ்பவர் என்று ஏற்றமாக எண்ணப்படும் நாம், மீனைச் சுமந்து ஈனர்களாய், எல்லோரும் சிரிக்க அசுரர் முன்னே செல்வதைவிட ஆவி துறத்தல் நன்று." என்று பலவாறு பன்னிப் புலம்பி, மீனைச் சுமந்துகொண்டு திக்குப் பாலகர்களோடு சூரன் திருநகரை நோக்கி நடந்தார்கள். அப்போது, அவரைக் கண்ட அசுரர் பலவாறு பேசுவாரா யினார்: "நெடுங் கடலைக் கலக்கி, இதோ! சில மீன்களைத் தருகின்றார் இவர் என்பார். "சாரமெல்லாம் கதிரவன் உண்ட பின்னர், வெறும் சக்கையை நமக்குத் தருகின்றார் இவர்" என்பார். "வேத நெறிமுறையை விட்டொழிந்த இவர், ஏவல் புரியும் பேதை நெறியை ஏற்றார்" என்பார். "குற்றமற்ற நிம் குலத்தை இகழ்ந்தவர் இப் பாடும் படுவார்; இன்னமும் படுவார் என்பார். "மண் ணவரும் இகழும் வன்பழியைப் பெற்றும் விண்ணவர் தலைவன் இன்னும் உயிர் விட்டிலனே' என்பார். "கண்ணாயிரம் படைத்த விண்ணவர் தலைவனுக்குக் கருத்து மிகக் குறைவே" என்பார். "அவன் பெண்ணோ அலியோ பேடோ" எனப் பழிப்பார். இவ்வாறு நிகழ்ந்த ஏளனப் பேச்சுக்கிடையே, ஈனமுற்ற வானவர்கள் எடுத்து வந்த மீன்களைத் தாரணிந்த சூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/79&oldid=919920" இலிருந்து மீள்விக்கப்பட்டது