பக்கம்:வேலின் வெற்றி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 73 இப்பொழுதே இந்திரனைப் பிடித்து வந்து இங்கே விடுக" என்று ஏவினான். பின்னும் ஒன்பது கோடி அசுர மாதரை அழைத்து, "தேவேந்திரனோடு இன்புற்றிருக்கும் தேவியை இங்கே எடுத்துவந்து கொடுத்திடுக" என்று வலிய படைத்துணையோடு விடுத்தான். "அளவற்ற படைகளோடு அசுரர் வந்தனர்; அசுரமாதரும் இது அர்செய்பவங்ால் அணுகினர் ஆன்னர் கருத்து யாதோ அறிகிலோம்" என ஒற்றர் வந்து இந்திரனிடம் ஒளித்தல் உரைத்து நின்றார்கள். தீயினும் கொடிய அசுரர் சூழ்ச்சியை அறிந்து, தேவியோடு மாயையால் மறைந்து, பூவுலகத்தை அடைந்தான், இந்திரன். விண்ணவர் தலைவனைப் பிடிக்கச் சென்ற வீரர் யாவரும் அவனைத் தேடினர்; அகர மாதர்கள் சசியைத் தேடினர் இருவரையும் காணாது மனம் சோர்ந்து பெருங்கவலை கொண்டனர்; இருவரும் தப்பிப் போயினர் என்று அசுரர் கோமானிடம் சென்று அறிவித்தார்கள். அந் நிலையில் அவன் நெருப்பெனச் சீற்றமுற்றான் அரு மணியிழந்த நாகம்போல் அலக்கண் உற்றான். அப்போது, வைகுந்தத்தில் இருந்த இந்திரன் மைந்தனாகிய - சயந்தன், பெற்றோர் இருவரும் ஒளித்துப் - இந்திi্যঃা போந்தவாறும், அசுரர் படை ' மைந்தனாகிய கேடிக் மீன் - 2 & தேடிக காணாது மணடவாறும, வானவா சயநதனை நதன துன்புற்றவாறும் அங்கிருந்தபடியே அறிந்தான். . தேற்றுதல் வானவர் நாடு வேந்தன் இன்றி வறிதே இருத்தல் ஆகாது என்று கருதி அங்குப் போந்தான் வருந்திப் புலம்பிய வானவரைக் கண்டான், தாய் தந்தையரைக் காண்ாது துன்பக்கடலில் மூழ்கினான்; ஏக்கமும் இரக்கமும் எய்தினான்; இன்னது செய்வது என்றறியாது பித்தன்போல் சித்தம் கலங்கி நின்றான். அவ் வ்ேளையில், அப் பாலன் உள்ளத்தைத் தேற்றக் கருதி, நாரத முனிவன் அங்கு வந்துற்றான். நடுங்கிய மேனியனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/81&oldid=919926" இலிருந்து மீள்விக்கப்பட்டது