பக்கம்:வேலின் வெற்றி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வேலின் வெற்றி எழுந்து வணங்கினான், சயந்தன், ஓர் ஆசனத்தில் அவனை அமர்த்தி அருகே நின்றான். அப்போது முனிவன் அவனை நோக்கி, "ஐயனே! முற்றும் உணர்ந்தவர்கள் இன்பம் வந்தடைந்த போது மகிழ்ந்திட மாட்டார்; துன்பம் வந்துற்றபோது துளங்கிடவும் மாட்டார்; பிறந்தோர்க்கெல்லாம் இன்பமும் துன்பமும் உடலோடு பொருந்தின அன்றோ? இரண்டும் முன்னை வினைப்பயன் என்றெண்ணி அமைவார். ஒரு காலத்தில் வறியராயிருப்போர், மற்றொரு காலத்தில் செல்வராவர்; செல்வமுற்றோர் பின்னொரு காலத்தில் வறியராவர். சிறியோர், பெரியர் ஆவர்; பெரியோர், சிறியவர் ஆவர். இவ்வாறு மாறி வருதல் அவரவர் செய்த பழவினையின் பயனே யாகும். சந்திர சூரியர் சஞ்சரிக்கும் உலகத் தியற்கை இதுவே. ஆதலின், இப்போதுள்ள அமரர் தாழ்வும், அசுரர் வாழ்வும் இப்படியே நிற்கமாட்டா. இவ் வுண்மையை மனத்திற் கொள்க. உன்னைப் பெற்ற தாயும் தந்தையும் இந் நகரை விட்டு அகன்று, தன் இயற்கை வடிவத்தை மறைத்து, நிலவுலகத்தை அடைந்துள்ளார்கள். இனிக் கொடிய சூரன் இறந்துபடுவான். உமது துயரம் விரைவில் ஒழியும். இதனை உள்ளத்தில் தெளிவாகக் கொள்க’ என்று நாரத முனிவன் தேற்றிச் சென்றான். ஒருவாறு சஞ்சலம் தீர்ந்த சயந்தன் தெளிவுற்று இருந்தான். வேண்டியார்க்கு வேண்டிய பொருளைத் தப்பாது அளிக்கும் இந்திரன் கற்பகச் சோலையின் நிழலில் வீற்றிருக்கும் அற்புத சீகாழியில் வாழ்க்கையை நீத்து, சித்திர மனைவியாகிய பூஞ்சோலை சசியோடு இந்திரன் தெக்கண தேசத்திற் போந்து வளர்த்தல் பன்னிரு பெயர் பெற்ற பழம்பதியாகிய சீகாழியை அடைந்து, அதுவே தக்க இடமெனத் தெளிந்து அங்குத் தங்கினான். அந்த நற்பதியில் இந்திராணியோடு தளர்வுற்றுத் தங்கியிருந்த இந்திரன், நாள்தோறும் அகமகிழ்ந்து ஈசனைப் போற்றிப் பூசனை புரியக் கருதி, அழகிய நந்தவனம் ஒன்று அமைக்கத் தலைப்பட்டான். அப்பொழுது அசுரர்களுக் கெல்லாம் தலைவனாகிய சூரன் அனுப்பிய ஒற்றர்கள் அவனை உலகம் எங்கும் தேடித் திரிந்தார்கள். அதை அறிந்த இந்திரன், தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/82&oldid=919928" இலிருந்து மீள்விக்கப்பட்டது