பக்கம்:வேலின் வெற்றி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 75 தேவியோடு மூங்கில் உருவம் கொண்டு மறைந்திருந்து தவம் புரிவானாயினான். இங்ங்ணம் சீகாழியில் வேணுவாய் நின்று தானுவைப் போற்றிய விண்ணவர் தலைவனை ஒற்றர்கள் காணாது போயினர்; ஆயினும், அசுரரது கொடுங்கோல் ஆட்சியால் வானம் மழை பெய்யாது ஒழிந்தது. இந்திரன் வளர்த்த நந்தவனம் வாடி நலிந்தது. நெடிய பூஞ்சோலை , நெருப்புற்றாற்போல் பொரிந்து கரிந்து போயிற்று. அதைக் கண்டு கவலை கொண்டான், இந்திரன்; திசைமுகனும் திருமாலும் தேடுதற்கரிய ஈசனை நினைந்து கரைந்துருகினான்; தொழுது ஏத்தினான். இவ்வாறு திரிபுரம் எரித்த தேவதேவனை மனமுருகித் தொழுது வருங்கால் விண்ணிலே ஒரு குரல் எழுந்தது; "வாசவனே! வருந்தாதே! நின் வாடிய சோலை வறண்டு ஒழியாது; இப் பதியில் ஒரு நதி வந்து எய்தும்" என்று ஆகாயவாணி கூறிற்று. இஃது இவ்வாறாக, முத்தமிழ் முனிவராகிய அகத்தியர், . ஈசனைத் தொழுது, "ஐயனே! அகந்தை ఎ:ప్; கொண்ட விந்தமாமலை, மேருவைப் பகைத்து ரிவர் அந்தர வழியை அடைத்தது. அதன் செருக்கை புறப்படல் அழிக்கத் திருவருள் புரிதல் - வேண்டும்" என்றார். அப்போது சிவபெருமான், "முனிவா! அதற்கு வேண்டும் வன்மையை உனக்கு அளித்தோம்! விந்த மாமலையை வேரோடழித்து, தென் திசைப் போந்து, பொதிய மலையில் நீ வாழ்வாயாக" எனப் பணித்தார். அப் பணி தலைமேற்கொண்டார், அகத்தியர். அந் நிலையில் கயிலையங் கிரியிலுள்ள நதிகள் ஏழினும் நலம் மிக வாய்ந்ததும் நன்னீரை உடையதும் ஆகிய பொன்னி என்னும் காவிரியாற்றைக் கருதினார், சிவபெருமான். வந்த காவிரியை முனிவர்க்குக் காட்டி, "இந்த ஆற்றை உனது பெரிய கமண்டலத்திற் கொள்க’ என்று அருளினார், சிவபெருமான். முனிவரும் அவ் வண்ணமே செய்தார். அகன்ற காவிரி அகத்தியர் கமண்டலத்திற் புகுந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/83&oldid=919930" இலிருந்து மீள்விக்கப்பட்டது