பக்கம்:வேலின் வெற்றி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 -வேலின் வெற்றி பொன்மலையினின்றும் புறப்பட்டார், முனிவர் துெத் திசையை நோக்கி நடந்தார் வழியில், வலிமை முனிவர் சான்ற அசுர மன்னனுக்குத் தம்பியாகிய தாரகன் கிரவுஞ்சன் வாழ்ந்த மாயாபுரத்தை வந்தடைந்தார். அங்கிருந்து కొణg கிரவுஞ்சன் என்னும் பேர் பெற்ற அசுரன் அவ: ക്രങ്ങ வருகையை நோக்கினான். அவன் ஓர் அணுவை ஒறுததல் மகாமேரு மலை யாக்குவான் மகா மேருவை அணுவினும் நுண்ணிய தாக்குவான்; நிலவுலகத்தை நெடுங்கட லாக்குவான் நெடுங்கடலை நிலவுல காக்குவான்; கொழுந்து விட்டு எரியும் பெருந்தீயைக் குளிர்ந்த நீராக்குவான். இத்தகைய அசுரன் மெய்த்தமிழ் முனிவர் செல்லும் வழியில் விந்தமலை போன்று கொத்தும் குவடும் நிறைந்ததொரு நெடுமலையாகி நின்றான். r . . . . அம்மலையின் ஊடே ஒரு பாதை சென்றது. அதனைக் கண்டார், அகத்தியர். அவர் அவ் வழியாகச் செல்லும் பொழுது கடுங்கனல் எழுந்து சூழ்ந்தது; சூறாவளி சுழன்று அடித்தது சோனைமாரி சொரிந்தது, இடி இடித்தது; இருட்பட்லம் சூழ்ந்தது. இங்ங்ணம் எண்ணிறந்த மாயை இயற்றினான் அசுரன். அது கண்ட அகத்திய முனிவர், நன்று நன்று அசுரன் இவ்வண்ணம் செய்ய வல்லனோ? அவன் வலிமையை இன்றே அழிக்கின்றேன்! என்று தமது கையிலமைந்த திரிதண்டத்தால் அம் மலையினைக் குத்திக் குடைந்து ஒரு வஞ்சினம் கூறலுற்றார்: "இத் தண்டத்தால் உண்டாகிய பிலங்கள் எல்லாம் நானா வித மாயைக்கு இருப்பிடம் ஆகுக, எம்பெருமான் பெற்ற செம்பொருளாகிய முருகன் வேற்படையால் இக் குன்றம் விரைவில் அழிந்து ஒழிக" என்று சாபமிட்டார். . - அப்பால், கங்கையாற்றின் கரையில் அமைந்த காசிப் பதியிற் முனிவர் விந்த கோயில் கொண்ட ஈசனது கமல பாதம் பணிந்து மலையின் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு, ஓங்கி உயர்ந்த அகந்தையை விந்த மலையின் ஒரு புறம் சென்று, அதன் அழித்தல் நிலையை அறியுமாறு பேச்சுக் கொடுத்தார்; "ஓங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/84&oldid=919932" இலிருந்து மீள்விக்கப்பட்டது