பக்கம்:வேலின் வெற்றி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வேலின் வெற்றி ஆயிற்று. உலகத்தில் உயர்ந்து விளங்கும் மகாமேரு மலையின் அடிவாரத்திலிருந்து அகத்திய முனிவர் புறப்பட்டு, துன்பம் செய்யும் அசமுகியின் மைந்தர் இருவரையும் கொன்று, கொங்கு நாட்டிற் போந்து ஈசனுக் குகந்த பூசனை புரிகின்றாராம். அம் முனி வரது அழகிய கமண்டலத்தில் காவிரியென்னும் பெருநதி அடங்கி யுள்ளதாம். என் ஐயனே அந் நதியை நிலத்திற் கவிழ்த்துவிட்டால் என் நந்தவனம் பிழைக்கும் என் மனக் குறையும் தீரும்" என்றான். இந்திரன் இவ்வாறு கூறுதலும், பிள்ளையாராகிய வள்ளல் மனமகிழ்ந்து, "அவ்வாறே. செய்வோம்" என்று அருளி, ജൂഖങ്ങ அவ்விடத்தில் விட்டு, காக வடிவாக விரைந்து போந்து, அகத்திய முனிவரது கமண்டலத்தில் அமர்ந்தார். காகத்தை ஒட்டக் கையை ஒச்சினார். முனிவர். அப்போது பிள்ளையார் கமண்டலத்தைக் கவிழ்த்துத் தள்ளிக் காவிரியை ஓட விட்டார். காவிரி ஓடிய பின்பு காகத்தின் வடிவை விட்டு, வேதம் பயிலும் வேதியச் சிறுவன்போல் நடந்து சென்றார், பிள்ளையார்; அது கண்டி அகத்திய முனிவர் சர்வ சங்கார காலத்தில் தோன்றும் ஆதி மூர்த்தி போல் சீற்றங்கொண்டு நின்றார், "இவன் தேவனோ? அசுரனோ? அரக்கனோ? ஆற்றல் வாய்ந்த இவன் யாவனோ? அறியேன்! ஆற்றைக் கவிழ்த்துவிட்டு அமைதியாகப் போகின்றான் கருத்தின்றிக் காரியம் செய்யும் செருக்கன் போலும் யாவனாயினும் இவன் தன்மையை விரைவில் அறிவேன்" என்று எழுந்து, இரு மணிக்கரங்களையும் மடித்தார். அவன் தலையில் குட்டுதற்காகச் சென்றார். அவ் வேதியச் சிறுவர், முனிவரின் அருகே வருவார்; கிளர்ந்து மேலே எழுவார் எட்டுத் திசைகளையும் எட்டுவார் நெருங்கி வருவார்; நெடுந்துரம் செல்வார். இவ்வாறு விளையாடிய விநாயகப் பெருமான், தொடர்ந்து வந்த முனிவர்க்குத் தம் உண்மைத் திருவுருவைக் காட்டினார். கண்டார் முனிவர், கலங்கினார்; "அந்தோ விநாயக மூர்த்தியோ இங்கு எழுந்தருளியவர்: ೨೯JಣTUT யான் வன்மையோடு துரத்தினேன்' என்று ஏக்கமுற்று வருந்தினார்; அவரைக் குட்டும்படி மடக்கிய கரங்களைக்கொண்டு மலையின் மேல் இடி விழுந்தாற்போல் தமது நெற்றியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/88&oldid=919940" இலிருந்து மீள்விக்கப்பட்டது