பக்கம்:வேலின் வெற்றி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 79 அருந்தமிழ் முனிவர் ஆற்றிய செயல்களை முற்றும் அறிந்த - நாரதர், வானவர் வேந்தனாகிய இந்திரனிடம் - 多 始 . பேர் - (3 . sitesipituus சென்று ஆ ు அகத்தியர் காவிரியைக் . . . றக கூறலுறறா தனககு உவமை, & & R யில்லாத் தலைவனாகிய ஈசன் அகத்திய ಕ್ಔ qqqqTಧಿÇT ಎಚ್ಡಿ ಹ್ಲಿ இருக்கும்படி அனுப்பியவாறும், அம் முனிவர் விந்த மாமலையைப் பாதலத்தில் அழுத்தியவாறும், மற நெறியை மேற்கொண்ட சூரனுடைய மருகர் இருவரையும் முடித்தவாறும், அவரைக் கொன்ற பாவம் தீருமாறு கொங்கு நாட்டை அடைந்து சங்கரனை மெய்யன்போடு போற்றி வழிபட்டு அங்கே இருந்தவாறும் முறையாகக் கூறி முடித்து மேலும் பேசலுற்றார். "அமரர் கோமானே! அவ் வருந்தவ முனிவர் இன்னும் கொங்கு நாட்டில் ஈசனார்க்குப் பூசனை புரிந்துகொண்டிருக்கின்றார்; அதனை நான் கண்டு வந்தேன். அவர் பக்கத்திலுள்ள கமண்டலத்தில் காவிரி யாறு அடங்கியுள்ளது. அந் நதி இங்கு வருவதற்குரிய வழியை நாடினால் உன் மனக்கவலை ஒழியும்" என்றார், நாரதர். இவ்வாறு நாரதர் கூறுதலும், "எம்பெருமானே குறு முனிவர் கொண்டுவந்துள்ள திருநதியை இச் சோலைக்கு வருவித்தல் எங்ங்ணம்? சொல்லியருள வேண்டும்" என்று வேண்டினான், இந்திரன், "வேழமுகம் உடைய விநாயகப் பெருமானைப் பேரமுது படைத்துப் போற்றினால், அவர் அக் கமண்டலத்தைக் கவிழ்த்திடுவார்" என்று கூறினார், நாரதர், . - அது கேட்ட இந்திரன், சிவகுமாரனாகிய பிள்ளையாரை அன்போடு தொழுது போற்றினான். அப் பெருமான் அவன் முன்னே தோன்றிக் கருணையால் நோக்கி, "அன்பனே! நீ ஆற்றிய பெரும் பூசையை ஏற்றுக்கொண்டோம் உனக்கு வேண்டும் வரம் யாது?’ என வினவினார். அப்பொழுது இந்திரன், "ஐயனே திருமலர் எடுத்துத் தேவதேவனை வழிபடக் கருதி நந்தவனம் ஒன்று வைத்தேன். அது நீரின்றிக் கரிந்து, பகலவன் கதிர்களால் மடிந்து, ஈசனார் கண்ணழலால் எரிந்த திரிபுரம்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/87&oldid=919938" இலிருந்து மீள்விக்கப்பட்டது