பக்கம்:வேலின் வெற்றி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வேலின் வெற்றி திருக்கயிலாயத்தின் தலைவாயிலில் நின்ற இந்திரனைக் கண்டார், நந்தி தேவர்; "நீ வந்த காரியம் யாது?’ என்று வினவி னார். விளைந்த தீமையெல்லாம் எடுத்துரைத்தான், வானவர் கோமான் அடிமுதல் நிகழ்ந்ததை அறிந்து, "இன்னும் நின் துயரம் தீர்ந்திலதோ? இப்போது ஈசனார் சனகாதிமுனிவர் நால்வர்க்கும் ஞானயோகத்தின் தன்மையை உணர்த்தியருள்கின்றார். ஆதலால், எவரும் அவரிடம் செல்வதற்கு இது ஏற்ற காலமன்று" என்று எடுத்துரைத்தார். நந்தி. பிரமதேவனும் திருமாலும் அறியவொண்ணாப் பிரணவப் . பொருளாகிய இறைவன் அமர்ந்தருளும் திருக்கயி அயிராணியும் நோக்கி இந்திரன் சென்ற பின்னர், அகமுகியும் சீகாழிப் பூங்காவனத்தில் தேவமாதர் போற்ற இந்திராணி தவம் புரிந்திருந்தாள். அப்பொழுது வெற்றி வெறி யுற்று மயங்கி வாழ்ந்த சூரன் குலத்தை வேரோடு அழிக்கவந்த ஊழ்வினை போன்ற அவன் தங்கையாகிய அசமுகி யென்பாள், துன்முகி யென்னும் தோழியோடு, சூலம் ஏந்திய கையும், ஆலகாலம் போன்ற மேனியும் உடையவளாய் அங்கு வந்தாள்: தனித்திருந்த தேவியைக் கண்டு வியப்புற்று, "அழகிய நறுமலர் சூடிய அயிராணியைக் கண்டேன் நான்; இவளிடம் கொண்ட ஆசையால் உழலும் அசுர வேந்தன் கவலையொழிந்து களிப் புறுமாறு இவளை அவன் முன்னே எடுத்துச் செல்வேன்" என்று துணிந்தாள். இந்திராணியின் முன்னே போந்து, "மாதவம் புரியும் மாதே! உன்னை யொப்பவர் இவ் வுலகில் உண்டோ? மாயவன் மார்பில் உறையும் திருமகளும் உனக்கு நிகராகாள். வல்லாளனாகிய சூரன் நின்னையடையத் தவம் புரிகின்றான். நீ எதற்காக இங்கே கரந்திருந்து கடுந்தவம் செய்கின்றாய்? அவன் அழிவற்றவன் உன் கணவனாகிய இந்திரன் அழிவுள்ளவன். அவன் நிகரற்ற இன்ப வாழ்வு வாழ்பவன், இவன் துன்பத்தில் உழல்பவன். அவன் பிறரை வணங்காப் பெற்றி வாய்ந்தவன், இவன் பலரையும் தொழுது நிற்பவன். திருமகளினும் சிறந்த அழகுடைய பதும

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/92&oldid=919950" இலிருந்து மீள்விக்கப்பட்டது