பக்கம்:வேலின் வெற்றி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 85. கோமளையையும் இனிச் சூரன் வெறுத்திடுவான்; மற்றைய மாதரையும் அப்படியே. எல்லையற்ற காதலோடும் உன்னுடன் இருந்து வாழ்வான். இஃது உண்மை. ஆதலால், என்னோடு புறப் படு” என்றாள், அறத்தினைக் கொன்ற அசமுகி. அன்னாள் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட அயிராணி, அயிராணிவின் பழுக்கக் காய்ச்சிய வேற்படையைக் தாதிற் துயரம் பாய்ச்சினாற் போலத் துயருறறுத துடிததாள * • அந்தோ நீ பழியும் பார்த்திலை; பாவமும் பார்த் திலை, வையகம் கூறும் வசையும் பார்த்திலை முறையும் பார்த் திலை; நெறியும் பார்த்திலை; இவ் விழிந்த கொடுஞ் சொல்லை நீ இயம்ப லாகுமோ?" என்றாள். - அப்போது அசமுகி, தீப்பொறி பறக்கப் பற்களைக் கடித்தாள். - . கறுத்த உதடுகளை மடித்தாள், பெருமூச்செறிந்தாள்; அழகியின் இடி இடித்தாற்போலக் ಧ್ಧಿఙ్ఞా சிற்றம் நன்று, நன்று என்று நகைத்தாள் சீறினாள்; "முற்றிய ஆற்றல் வாய்ந்த மூவர் தடுப்பினும், மற்று யாவர் தடுப்பினும், போர் தொடுப்பினும், உன்னை யான் விடுவதில்லை. விரைந்து எடுத்துச் சென்றே தீர்வேன். அதனை இன்னே பார் என்று அயிராணியைப் பிடித்தாள். - அந் நிலையில் இவள் அரற்றினாள் ஆவி யிழந்தாற்போல் அவசமுற்றாள்; உணர்வு தீர்ந்தாள், நீல மலர் போன்ற கண்களால் நெடுங்கண்ணி வடித்தாள். இப்படி வாடி வருந்திய தேவியை இரக்கமற்ற அசமுகி பற்றி யிழுத்துச் சென்றாள் மனங்கலங்கிய மாது மெய் சேர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள் காப்பவர் யாரையும் காணாளாய் வாய்விட்டுக் கதறினாள். அப்போது ஐயனாரின் படைத்தலைவனாகிய மாகாளன் வெளிப்பட்டான்; நில், நில் என்று சொல்லி உடைவாளை உருவினான்; ஒரு கரத்தால் அசமுகியின் தலையைப் பற்றி இழுத்து, அயிராணியைத் தொட்ட கையை அறுத்திட்டான். வானவர் துள்ளி மகிழ்ந்தனர். அசமுகியின் கை விழுந்தவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/93&oldid=919954" இலிருந்து மீள்விக்கப்பட்டது