பக்கம்:வேலின் வெற்றி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வேலின் வெற்றி அருகே வந்து நின்ற துன்முகியை நோக்கி, "நீயும் தேவியின் மேனியைத் தீண்டினா யன்றோ என்று கூறி, அவள் கரத்திலும் ஒன்றை மாகாளன் துணித்திட்டான். குருதி பொங்கிப் பெருகிற்று. அப்போது, கையற்ற அச்முகி, உள்ளம் கறுத்து, “oGຽnt Limi உலகமெல்லாம் சூரனே ஆள்கின்றான். அவன் அசமுகியின் ஆழியும் ஆணையும். செல்லாத இடமில்லை. அஞ்சி" ஆதலால், இங்கே இருப்பினும், மற்று எங்கே சென்று ஒளிப்பினும் இனி நீர் பிழைத்தல் அரிது. உம்மைச் சிறைப்படுத்தாவிடில் நான் சூரன் தங்கையல்லேன், பேடி என்று என்னை இகழ்க" என்று கூறிச் சென்றாள். சிறிது விலகி நின்ற வீர மாகாளன் அயிராணியை நோக்கி, "அன்னையே! அசுரரைக் குறித்து நீர் சிறிதும் அஞ்ச வேண்டா. உம் கணவன் வருமளவும் நானே காப்பேன். இச் சோலையிலே இருப்பீராக’ என்று சொல்லிச் சென்றான். - நாரதர் வாயிலாகப் பூஞ்சோலையில் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த இந்திரன் தன் தேவியிருந்த இடம் போந்தான். அங்கிருந் தால் ஆபத்து வரும் என்று அவளையும் அழைத்துக்கொண்டு வானவரோடும் மாமேரு மலையிற் சென்று மறைந்திருந்தான். பரந்த உலகங்களிலுள்ள சூரியர்களையெல்லாம் ஒருங்கே , , , திரட்டி, ஊழித் தீயில் இட்டு உருக்கி ஒன்றாக்கி சூரன் திறம் ஆசனமாகச் செய்து, விண்மீன்களை அதில் நன்மணிகளாகப் பதித்து, முற்றிய கலைகளோடு விளங்கும் சந்திரரைச் சிங்கங்களாக அமைத்தாற் போன்று வீர மகேந்திர நகரின் விழுமிய அரண்மனையில் அசுரர் கோமானது அரியாசனம் விளங்கிற்று. அத் தகைய அரியாசனத்தில் அழியாத் தன்மை வாய்ந்த சூரன் கூற்றுவரெல்லாம் ஓர் உருக்கொண்டு, விண்ணுற நிமிர்ந்து விளங்கினாற் போன்று, அசுரர்கள் போற்ற அரசு வீற்றிருந் தான். அழகிய கூந்தலையுடைய அரம்பை, ஊர்வசி, திலோத் தமை, மேனகை முதலாய தேவ மாதரும், இயக்க மாதரும், வலிமை வாய்ந்த அரக்க மாதரும், அசுர மாதரும், விஞ்சையர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/94&oldid=919955" இலிருந்து மீள்விக்கப்பட்டது