பக்கம்:வேலின் வெற்றி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை . 87 சாரணர், சித்தர் என்னும் முக்குல மாதரும், மற்றைய மாதரும் வெவ்வேறாக முறைப்படி நடனம் செய்தனர். சூர மன்னன் செயற்கரிய வேள்வி செய்து வரம் பெற்ற திறத்தையும், எட்டுத் திக்கும் சென்று குபேரன் முதலாகிய யாவரையும் வென்ற வலிமையையும், அண்டங்களையெல்லாம் கண்டு சிறப்புற அரசு புரிந்த ஆண்மையையும், அருகே நின்ற அரசுர் பலர் முறை முறையாகப் புகழ்ந்து ஏத்தினர். அப்போது அவன் தங்கையாகிய அசமுகி துன்முகியோடு - கையற்ற - மகேந்திர நகரின் అడ్రాప్తి வந்தாள். நகர வீதியிலே காட்சி அவள் வரும்பொழுது இந்திரன் செய்த வேலையோ . இது என்பார் சிலர், ஒளித்துத் திரிகின்ற அவன் இது செய்ய வல்லனோ என்று மறுத்துரைப்பார், சிலர். மற்றைத் தேவர்கள் செய்திருப்பார்களோ என்று ஐயற்றார், சிலர் நம் ஆணைக்கு அடங்கி ஏவல் புரியும் அவர் இத்தகைய செய்கையை நினைக்கவும் துணிவரோ என மாற்றம் உரைப்பவர், சிலர். வீரமகேந்திரத்து மகளிரும் ஆடவரும் இவ்வாறு நெருங்கிச் சூழ்ந்து வருந்தித் தளர்ந்து நிற்க, அவரைக் கடந்து அசமுகி துன்முகியுடனே அக நகரம் போந்து, மன்னர் மன்னனாகிய சூரன் வீற்றிருந்த மாளிகையை நோக்கி நடந்தாள். மாயையில் வல்ல தன் தாயையும், மற்றுமுள்ள சுற்றத் ஐ தாரையும், மருகரையும், உடன்பிறந்தாரையும் முறையிடல் மனத்தில் நினைத்துக் கதறிக்கொண்டு அவள் - மணிமாட மாளிகையின் அருகே சென்றாள். தொழுகுரல் நிறைந்த மாளிகையில் அப்போது அழுகுரல் எழுந்தது. உற்றாரை யெல்லாம் தனித்தனியே அழைத்து அசமுகி ஓலமிட்டாள்; "ஐயோ அசுரகுல வீரரே வானுலகின் வளங்குறைத்தோம்; வலி குறைத்தோம்; வரம் குறைத்தோம்; புகழ் குறைத்தோம்; வானவரை ஏவல் கொண்டோம் என்று மனப்பால் குடித்தீரே அவர்களுள் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்து, உமது மூக்கறுத்துவிட்டானே! அதை அறியீர் போலும் குழந்தைப் பருவத்திலே செங்கதிரோனைச் சினந்து பற்றிச் சிறைசெய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/95&oldid=919956" இலிருந்து மீள்விக்கப்பட்டது