பக்கம்:வேலின் வெற்றி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வேலின் வெற்றி மருகனே பானு கோபனே! என் கையை ஒருவன் குறை செய்து சென்றானே! நீ ஏன் என்று கேளது இருந்தனையே! இஃது என்ன கொடுமை! அந் நாளில் ஓரடியால் உலகளந்த திருமாலின் நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்ட தாரகனே! இந் நாளில் ஒப்பற்ற பழி பூண்டயே மாற்றார் வந்து என் கரத்தை அறுத்தார். தமையனாகிய நீ அரசு வீற்றிருந்தாய் முன் நிறைந்து பின் குறையும் நீர்மை வாய்ந்ததோ நின் ஆற்றல்: சிங்கமுக வீரனே! வெள்ளை யானையோடு இந்திரனை ஒரு கையால் வானத்தில் நீ வீசி யெறிந்தாய் என்றும், அவன் கீழே வந்து விழுந்தபோது உன் காலால் உதைத்தாய் என்றும் சொன்னார்களே! அதை மெய்யென்று நம்பி வியந்திருந்தேனே அது புனைந் துரைதானோ? இந்திரன் துதன் இன்று என் கரத்தைத் துணித்தானே! அரிமுகவீரா நீ அதனை அறியாயோ? வானவர் சூழ்ச்சியால் ஒரு முனிவன் என் இரு மைந்தரது உயிரைக் கவர்ந்தான்; அம் மட்டோ? இன்றும் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்திட்டான். இங்ங்ணம் தங்கை தயங்க நீ தனியரசு புரிதல் தவறன்றோ? "மன்னர் மன்னா! நான் அடைத்த மானத்தை நீ மனங் கொள்ளாயோ? அரசாளும் அண்ணா! அண்ணா கரமிழந்தேன். ஆதலால் உறவிழந்தேன். ஊனமுற்றோர் உயிர் வைத்திருத்தல் ஈனமன்றோ? அந்தோ! இவ் வுயிரை விடு முன்னே மானம் அடுகின்றதே! பாவி நான் பெண்ணாகப் பிறந்து பெற்ற பயன் இதுதானோ விதிக்கு என்மீது பகையுண்டோ?" என்று பலவாறாக அரற்றிக்கொண்டு, துன்முகியோடு சென்ற அசமுகி அரச மன்றத்தில் அமர்ந்திருந்த சூரன் அடிகளில் விழுந்து புரண்டாள். அது கண்ட சூரன் "தங்கையே! அசமுகி: ஏன் இங்ங்னம் சூரன் வருந்துகின்றாய்? ്.ങ്ങങ്ങ உணராமலும் 6) ஆறமுறுதல் கருதாமலும் ஆன கரத்தையும், தோழியின் கரத்தையும் துணித்தவர் யார்? அவர் இன்னும் உயிருட்ன் இருக்கிறார்களா?" என்று இடிபோல் வினவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/96&oldid=919958" இலிருந்து மீள்விக்கப்பட்டது