பக்கம்:வேலின் வெற்றி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 83 "ஐயனே! இந்திரன் மனைவியாகிய அயிராணி நிலவுலகின் ஒருபுறத்தில் இருந்து நோன்பு செய்கின்றாள். அவளை உன்னிடம் சேர்க்கக் கருதி அங்குச் சென்றோம்; அவளை எடுத்தோம். அவ் வேளையில் வானவன் ஒருவன் விரைந்து வந்து எங்கள் கைகளை அறுத்திட்டான், அயிராணியையும் அழைத்துச் சென்றுவிட்டான்" என்று கையற்றவள் சொல்லி முடிக்கு முன்னமே சூரன் கண் களிலிருந்து தீப்பொறி பறந்தது, வாயினின்று தீப்புகை பிறந்தது; மூக்கினின்று சுடுமூச்சு எழுந்தது; அது கண்டு மண்ணுலகம் நடுங் கிற்று; விண்ணுலகும் நடுங்கிற்று; பெருங்கடல் நடுங்கிற்று : பிரமபதம் நடுங்கிற்று, மாயவன் நகரம் நடுங்கிற்று; அசுரரும் நடுங்கினர் என்றால் இவ் வுலகத்தில் நடுங்காதார் யாவர்? சூரனது கோபம் சாலப் பெரிதன்றோ? அந் நிலையில் சுற்றி நின்றவரை நோக்கிச் சூரன் பேசலுற்றான், "அகர வீரர்களாகிய நீர் இருந்தும், மைந்தர் இருந்தும், நிகரற்ற தேர் இருந்தும், நேமி இருந்தும், என் பேர் இருந்தும், என் உயிர் இருந்தும், வேறு யார் இருந்தும், எது இருந்தும் என்ன பயன்? அந்தோ! எல்லாம் இருந்தும், அசமுகி படும் பாடு இதுவோ? என் அரசியல் நன்று நன்று" என்று நகைத்தான். அப்பொழுது சூரன் மைந்தருள் வலியவனாகிய பானுகோபன் சீற்றமுற்று எழுந்து, வீரக்கழல் முழங்க நடந்து பானுகோபன் சென்று, வேந்தன் அடிபணிந்து, "ஐயனே! பழிக்குப்பழி நமக்குக் குற்றேவல் செய்து உடைந்த மனத்தின வாங்க னாய் ஒளித்திருக்கின்றான், இந்திரன். ஏனைய முற்படுதல் வானவர் வலிமை யற்றவர்; இப்படிச் செய்ய அவர் மனத்திலும் நினையார். நிலைமை இவ்வாறிருக்க உன் தங்கை கை இழந்தது என்ன மாயமோ அறியேன், அதனை அறிய மாட்டாது வருந்துகின்றேன். ஆயினும், இன்றே சென்று இவர் கைகளை யறுத்த ஆடவனையும் நின் மனத்தில் ஆசையை விளைத்த அயிராணியையும், மறைந்து திரியும் இந்திரனையும், தம் உயிரில் ஆசையற்ற தேவரையும் பற்றி வருவேன். அடியேனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/97&oldid=919960" இலிருந்து மீள்விக்கப்பட்டது