பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 வேலை நிறுத்தம் ஏன்? கேட்டால் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேங்கிறான்! - என்ன செய்வது? - இன்றிரவு மட்டும் எனக்காக, இந்த ஏழைக்காக நீ அவனுக்குக் கொஞ்சம் இணங்கி விட்டால் ?” "ஆமாம் போங்கள்! - ஊட்டியிலே எனக்கென்று ஒரு தனி பங்களா வாங்கித் தர வேண்டுமென்று சொல்லி எத்தனைநாளாச்சு?" என்று சற்றே பிகு செய்து கொண்டாள் நட்சத்திரம். 'அட கடவுளே, உன்னிடம் நான் இதுவரை சொல்லவே யில்லையா?" என்று ஒருபோடு போட்டு விட்டு, ஹொஹ் ஹொய் ஹோஹோ என்று சிரித்தார் அவர் அந்தச் சிரிப்பைச் சகிக்காமல் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு, "என்ன, எனக்குத் தெரியாமலாவாங்கி விட்டீர்கள்?" என்று பரபரப்புடன் கேட்டாள் அவள் 'இல்லை, ரெயின்போ மாடலில் புதிதாகவே ஒன்று அங்கே கட்டிவிடலாமென்று பிளான் போடச் சொல்லியிருக்கிறேன்!" "பலே! எங்கே, கை கொடுங்கள்!"