பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 வேலை நிறுத்தம் ஏன்? "என்ன பிரயோசனம்? ஸ்பென்ஸ்ரைத்தான் இந்நேரம் மூடியிருப்பார்களே!" என்றார் பொறுமை யிழந்த பத்மநாபன் குறுக்கிட்டு அதற்குள் ஏதோ ஒரு கார் கிளம்பும் சத்தம் கேட்கவே, எல்லோரும் ஏககாலத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். என்றும் அழியாத கன்னியான மிஸ் லீலா அந்தக் காரில் இருந்தபடித் தலையைக் கொஞ்சம் வெளியே நீட்டி, "குட் நைட்!" என்று அத்தனை பேருக்கும் சேர்ந்தாற்போல் படுசிக்கனமாக ஒரே வார்ததை சொல்லி வைத்தாள் அட்சர லட்சம் பெறும் அந்த வார்த்தையைக் கேட்டு ஒரளவு உச்சி குளிர்ந்தாலும் பத்மநாபன் விடவில்லை. "ஒன் மினிட், ஒன் மினிட்!" என்று கத்திக் கொண்டே காரை நோக்கி ஓடினார். மற்ற படாதிபதிகளும் அதே கூக்குரலுடன் அவரைப் பின் தொடரவே, நட்சத்திரம் பயந்து போய்க் காரை நிறுத்தவில்லை! என்ன இருந்தாலும் பெண்தானே? எத்தனை 'சைத்தான்களுக்குத்தான் ஈடு கொடுப்பாள்? 登 豫 登