பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 27 முக்கியமாக, இந்தியத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைப் போதுமான அளவு அதிகரிக்கச் செய்யவில்லை வெளிநாடுகளிலிருந்து புதிய இயந்திரங்களை வரவழைத்து, இந்தியாவின் உற்பத்திச் சக்தியைப் பெருக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்யவில்லை - அவர்கள் செய்யாததோடு மட்டுமல்ல அமெரிக்கா போன்ற அன்னிய நாடுகளின் மூலம் இந்தியா தொழில் வளம் அடைவதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கு இருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு இந்த அடிமை நாட்டில் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தனர்! இத்தகைய மனோபாவம் கொண்டவர்கள் இந்தியாவை யுத்த முயற்சியில் ஈடுபடுத்தாமலாவது இருந்திருக்கலாமல்லவா? அதுவும் இல்லை. இந்தியாவில் ஏற்கெனவே இருந்த தொழிற் சாலைகளைக் கொண்டே தங்கள் யுத்த காலத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பெரும் முயற்சி செய்தனர்.