பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 55 இதன் நோக்கம், இடையேயிருக்கும் இருபத்து மூன்று நாள் அவகாசத்தில் ரயில்வே அதிகாரிகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஏதாவது சமரசம் செய்து வைக்கட்டும் என்பதுதான். சர்க்காரின் நோக்கம் உண்மையிலேயே அமைதியை நிலைநாட்டுவதாயிருந்தால், தொழிலாளி களும் அவர்களுடைய தலைவர்களும் எதிர்பார்த்தபடி, மேற்கூறிய இருபத்து மூன்று நாள் அவகாசத்தில் கட்டாயம் சமரசம் செய்து வைத்திருக்கலாம். ஆனால், இடைக்காலத் தேசீய சர்க்காரும் அதை விரும்பவில்லை; சென்னை மாகாணப் பிரகாசம் சர்க்காரும் அதை விரும்பவில்லை வேலை நிறுத்தம் ஆரம்பமாயிற்று. தென்னிந்திய ரயில்வே ஏஜென்டான ரெய்னால்ட்ஸ் போர்க்கோலம் பூண்டார். அவருடைய பச்சைப் பொய்களையெல்லாம் தேசீயப் பத்திரிக்கைகள் என்று சொல்லிக்கொள்பவை பத்தி பத்தியாகப் பிரசுரித்துப் பெருமையடைந்தன. அதே சமயத்தில் தொழிலாளர் சங்கத் தலைவர் களின் அறிக்கைகளையெல்லாம் குப்பைக் கூடையில் போட்டுத் திருப்தியடைந்தன.