பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 8ሽ "நீ திருடனாக மாறினால் நானும் திருடனாக மாறத் தயார்' என்று அவனுக்குத் தன் மேலான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டான் அவன் நண்பன் அந்தோணி, 'அவ்வளவுதான் இப்படி எல்லோருமே மாறி விட்டால் உங்கள் ஏசுவின் உலகம் என்ன ஆகும், தெரியுமா? - சைத்தானின் உலகமாக மாறும்!" என்றாள் முத்தாயி, 'ஆஹா இருப்பவன் வீட்டை இல்லாதவன் கொள்ளையடிப்பதற்கு மட்டும் துணிந்து விட்டால் புரட்சி முளைக்கும்; புத்துலகம் பூக்கும்!" என்றான் அந்தோணி, 'இரண்டும் நடக்காது இருட்டறையில் இடந்தான் கிடைக்கும்!" என்றாள் முத்தாயி, "தனித் தனியாகச் சென்று ரகசியமாகக் கொள்ளையடித்தால்தானே?" - நாங்கள் தான் ஒரே கூட்டமாகச் சென்று பகிரங்கமாகக் கொள்ளையடிக்கப் போகிறோமே!" என்றான் ரத்தினம். "இந்தச் சமயத்தில் "மூளையில்லாத பயல்கள்!" என்று யாரோ முணுமுணுக்கும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது. அந்தோணியும் ரத்தினமும் திரும்பிப் பார்த்தனர்;