பக்கம்:வேளிர் வரலாறு.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தார்கள். * இவர்களால் அன்புகூர்ந்து செய்யப்பெற்ற பெரு நன்றி என்னால் என்றும் மறக்கத்தக்கதன்று. இங்ஙனம், நல்லறிஞர் பல்லோரது நன்கு மதிப்பு இச்சிறுவியா சத்துக்கு ஏற்பட்டது எனக்குப் பின்னும் ஊக்கமளித்தமையால் வேளிர்குலத்தில் அறிவாற்றல் பெருமை முதலிய உயர்குணங்கள் வாய்ந்து தமிழகம் புகழ விளங்கிய பழையவள்ளல்கள் சிலரது வர லாறுகளையும் செந்தமிழில் முறையே எழுதி வெளியிடலானேன். இப்போது, இவ்வேளிர் வரலாற்றைக் கனந்தங்கிய சென்னைச் சர்வகலா சங்கத்தாரும் (University) நன்கு மதித்து, தமிழ் கற்கும் மாணவர்க்கு உபயோகமாம்படி , 1914-ம் வருஷத்து இண்டெர்-மீடி யட்” (Intermediate) பரீக்ஷா பாடங்களுள் ஒன்றாக நியமித்திருத்த லறிந்து மகிழ்கின்றேன். இக்கெளரவமளித்ததின் பொருட்டு ஷெ சங்கத்தார்க்கு மிகவும் நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். வேளிர் விஷயமாக எழுதப்பெற்ற என் வியாசங்களை ஒருங்கு திரட்டி வெளியிடுவதற்கு இதனையே தக்க சமயமாகக்கொண்டு, ஷை ஆராய்ச்சிகளை மறுமுறை சோதித்துப் பல திருத்தங்களுடனும் கீழ்க்குறிப்பு அநுபந்தங்களுடனும் ஒரு சிறு நூலாக இப்போது வெளியிட்டிருக்கிறேன். இதனுட் கண்ட வேளிருள்ளே பாரி என்ற வள்ளலின் வரலாறு முழுதும், என் அரும்பெறன்மைத்து னரும் ஸேதுஸம்ஸ்தானவித்துவானுமாகிய ஸ்ரீ: ரா. இராகவையங்கார் அவர்களாற் செவ்விந்தின் எழுதப்பெற்றுச் செந்தமிழில் முன்னரே வெளிவந்துள்ளது. அவ்வாராய்ச்சியுரை இந்நூற்குப் பெரிதும் ஏற்றதானமையால், ஐயங்காரவர்களது அன்புடையனுமதி பெற்று, அதனை இவ்வியாசத்துக்கு ஏற்றபெற்றியில் அமைத்து வெளியிட் டிருக்கிறேன்.

  • Journal of the Royal Asiatic Society Ceylon-Branch.

No. 61.-1908.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/10&oldid=990562" இலிருந்து மீள்விக்கப்பட்டது