பக்கம்:வேளிர் வரலாறு.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம். சில வருஷங்கட்குமுன் சங்கச்செய்யுள்களை யான் ஆராய்ச்சி செய்துவந்தபோது, அவற்றிற் கண்ட சிற்றரசர்களிலே வேளிர் என்று குறிக்கப்பட்டவர் ஒரு தனியான குலத்தவர் என்பதற்குச் சிலபல சான்றுகள் கிடைத்தன. அதனால் அக்கூட்டத்தாரைப் பற்றிப் பின்பு செவ்வையாக ஆராயும்படி நேர்ந்ததோடு, அவ்வா ராய்ச்சியின் பயனாக வேளிர்குலத்தைப்பற்றிய முடிவான கொள் கைகள் சிலவும் ஏற்பட்டன. அவற்றை அறிஞர் சிலர்க்கு அறிவித் துக்கொண்டதில், அன்னோரும் என் கொள்கைகளை ஆமோதித்து ஊக்கினர். பின்பு, 1905-ம் வருஷம் நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச்சங் கத்தின் நான்காம் வருஷக்கூட்டத்தே, The Tamils 1800- years ago ” என்ற அரிய தமிழ்ச்சரித நூலின் ஆசிரியராக விளங் கிய ஸ்ரீமாந் - வி. கனகசபைப்பிள்ளை அவர்களது அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய வித்வஸமூகத்தின் முன்பு, என்னாராய்ச்சிகளைத் திரட்டி யெழுதி அரங்கேற்றலாயினேன். அவ்வியாசம், அச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகையிலும் பின்பு வெளியிடப்பெற்றது. பத்திரி கையில் வெளிவந்த அதனைப் படித்த நம் நாட்டறிஞர் பலர், என் கொள்கைகளில் நமக்குள்ள சம்மதத்தைத் தாமே மகிழ்ச்சியுடன் எனக்கு அறிவித்தார்கள். அன்னோர் அபிப்பிராயங்கள் சில அடுத் துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுள், கொழும்பு ஸ்ரீமாந்- வி. ஜெ. தம்பிப்பிள்ளையவர்கள், M. R. A. S., தம்முடம்பாடறிவித் ததுமட்டுமன்றி, ஆங்கிலத்தில் இவ்வியாசத்தை அழகுற மொழி பெயர்த்துப் பல கீழ்க்குறிப்புக்களும் இட்டு - இலங்கைப் பகுதி ராயல் ஏஷியாடிக் ஸொஸைடிக்கு அனுப்பி அதனை வெளியிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/9&oldid=990563" இலிருந்து மீள்விக்கப்பட்டது