உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாற்றைப்பற்றிய சில அபிப்பிராயங்கள், (1) மஹாமஹோபாத்யாயர்: ப்ரம்மஸ்ரீ. வே. சாமிநாத ஐயர் அவர் கள்:-"இந்தமுறை செந்தமிழில் வெளிப்பட்ட நன்னன் வேண்மான் முத லிய நியாஸங்கள் மிக்க ஆனந்தத்தை உண்டுபண்ணின. மிகவும் கடினமாகிய சங்கச்செய்யுளிற் புகுந்து ஆராய்ந்து ஒழுங்காக விஷயங்களை எடுத்தெழுதுவ தைக்காட்டிலும் சிறந்த அருமை வேறு யாதுள ? எல்லாம் அவ்விடத்துப் பெரு முயற்சியால் வந்த பயனே”-- (ஸ்ரீமாந்-பாண்டித்துரைத் தேவரவர்கட்கு 3-5-06-ல் எழுதிய கடிதப் பகுதி) (2) "செந்தமிழ்” ப்பத்திராசிரியராயிருந்த-ஸே துஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார் அவர்கள்:- நீ செந்தமிழில் எழுதிவரும் வியாசங் கள் பெரிதும் மதிக்கத்தக்கனவாயுள்ளன. "ஆயண்டிரன், நன்னன் வேண் மான் முதலிய வேளிர் வரலாறுகளைப் படித்துப் பெருமகிழ் வடைந்தேன். உன்னால் எழுதப்பட்டுள்ள வியாசங்களெல்லாம், நுண்ணிய ஆராய்ச்சியொடுகூடி யேவிளங்குதலால், இனி எழுதப்படுவனவும் அவ்வாறு விளங்கத் தடையில்லை என்றே நம்புகிறேன். (5-3-06) (3) ஸ்ரீமத்-திருமணம்-செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் M. A., பச்சையப்பன் காலேஜ், சென்னை:--ஐயரே! புறநானூறு வகுப்பிற் பாடமாக நடக்கும்போது அதில் இருங்கோவேளின் ஆதிக்க முரைக்கும் இடத்திலும் நச்சினார்க்கினியர், வேளிரின் ஆதிக்க முரைக்கின்ற இடத்திலும் பிற்றைநாள் வரலாறுகளுடன் தொடர்புபடுத்த இயலாது இடர்ப்பட்டுவிட்டேன். ஆயினும், தாங்கள் எழுதிய வேளிர் வரலாற்றில் இன்றியமையாத சரித்திரக் கூறுகளும் மேற்கோள்களும் பற்றாசான சான்றுகளும்-"பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய --மாமலை பயந்த காமரு மணியும்- இடைபடச் சேய வாயினுந் தொடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/12&oldid=990560" இலிருந்து மீள்விக்கப்பட்டது