பக்கம்:வேளிர் வரலாறு.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ந்து-அருவிலை நன்கலம் அமைக்குங் காலை-ஒருவழித் தோன்றி யாங்கு”-இயைபுபடத் தொடர்புடையனவாய் அமைந்திருத்தல் கண்டு அடங்கா மகிழ்ச்சி அடைந்துளேன். தங்கள் வியாசத்தைப் படித்தவுடனே, தொண்டை மண்டலத்து உயர் துளுவ வேளாளர் என்னும் எங்கள் பூர்வோத்தரம் இப்பொழுது வெள்ளிடை விலங்கலாக விளக்கமெய்துகின்றது. தங்கள் வியா சத்தைப் படித்த அளவிலே என்பாலெழுந்த மகிழ்ச்சி, யான் உள்ளபடி செல்வக் கேசவராயனாயின், உடனே வரிசைகள் பல செய்யுமாறு என்னை ஏவியிருக்கும்; யான் சேதுபதியல்லனே, பாண்டித்துரைச்சாமியல்லனே, புதுக்கோட்டைத் தொண்டைமான் அல்லனே.......... இதனால், என்னுளங்கொளா மகிழ்ச்சி என்னைவிட்டு என்னுள்ளத்தை ஈர்த்துக்கொண்டு தங்கள் பாற் சென்றுவிட்டது. அதன் மகிழ்ச்சியை அங்கீகரித்து அதனை என்பால் விடுக்க. (1905. ஜூலை. 5) (4) ப்ரம்மஸ்ரீ: S. இராதாகிருஷ்ணையர் அவர்கள், பிரின்ஸிபால், மகாராஜா காலேஜ், புதுக்கோட்டை:- தங்களால் எழுதப்பெற்ற பழைய கைத் தொழில்வியாபாரங்கள், வேளிர் வரலாறு, மாதைத் திருவேங்கடநாதர், பொய்யாமொழிப்புலவர், வீரத்தாய்மார் முதலியவை வந்து சேர்ந்தன. இவற் றுட் சிலவற்றை முன்னரே வாசித்திருக்கிறேன். இவை மிக்க ஆராய்ச்சியைக் காண்பிக்கின்றன என்று யாவரும் ஒப்புக்கொள்வார்கள். தாங்கள் தமிழுக் கென்று உழைத்துவருவதுபோல் அநேகர் உழைத்தால், மறைந்து கிடக்கும் பல அரிய விஷயங்கள் எளிதில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. (5-2-1908.) (5) ஸ்ரீமத்-J. M. நல்லசாமிப் பிள்ளையவர்கள், B. A., B. 1., டி-முன் ஸுப், ராஜமஹேந்திரம்--(17--4-1910) "புறப்பொருள் வெண்பாமாலை புறநானூறு இவைகளினின்றும், டாக்டர் ஜி. யூ. போப்பையரவர்களால் மொழி பெயர்க்கப்பட்டவைகளை இப்பொழுது அச்சிட்டு வருகின்றேன். நான் எழுதி வரும் அதன் உரைப்பாயிரத்திற்குத் தாங்கள் எழுதியுள்ள வான்மீகரும். தென்னாடும்” என்ற விஷயம் மிகவும் உபயோகமாயிருந்தது. "வேளிர், வேள் புலம்” என்ற விஷயங்களும் மிகவும் முக்கியமானவை. வேளாண்மாந்தரைப் பற்றிய எனது சந்தேகம், இப்பொழுது கண்ட வேளிர் வரலாற்றினால் ஒழிந்த தாகும். இவ்வாராய்ச்சியில் தாங்கள் செய்துள்ளது மிகவும் சிறப்பிக்கற் பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/13&oldid=990559" இலிருந்து மீள்விக்கப்பட்டது