பக்கம்:வேளிர் வரலாறு.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. யாதவகுலத்தவரென்று விளங்கக்கூறாது போயினும், ஒருகுலத்தவ ராகவே தம்நா வில் எழுதல் காணலாம்.* இனி, இப்பேலாலயாதவரும் பண்டைத் தமிழ்வேளிரும் ஒரு கூட்டத்தவரே என்பதற்கு வேறொரு சிறந்த சான்றுங் கூறுவோம். புறநானூறு என்ற சங்க நூலிற் கபிலரென்னும்புலவர், வேளி ருள் ஒருவனாகிய இருங்கோவேளை அழைக்குமிடத்து, அவனை, துவா ரகையினின்று வந்து தென்னாடாண்ட வேளிர் வழியினன் என்று கூறியிருக்குஞ் செய்தி முன்னரே குறிக்கப்பட்டது. அவ் வேளை நோக்கிக் கபிலர் தாம்பாடிய இரண்டு பாடல்களிலும் (புறம்-உ02, உ0.) புலிகடிமால் என்ற சிறப்புப்பெயரால் அவனைக் கூறுகின்றனர். இதற்குப் புறநானூற்றுரைகாரர்-"புலிகடிமால் - இவனுக்கு ஒரு பெயர்” என் றமட்டிற் காட்டி, அப்பெயர்க்காரணத்தை விளக்காமற் போயினர். அன்றியும், அதன்காரணத்தைச் சங்க நூல்களினின்று தெரிதல் இப்போது அரிதாம். எனினும், பிற்காலத்தே துவாரகையி னின்று வந்து மைசூர் நாட்டை ஆண்ட பேலாலர், அப்பெயர் வழக் கைத் தம் வரலாற்றால் விளக்கித் தாம் தமிழ்வேளிருடன் ஒற்றுமை பெற்றவர் என்பதைக் குறிப்பித்தல் நோக்கத்தக்கது. கொங்குதேச ராஜாக்கள் சரித்திரம்” என்ற நூலிலும், + ஆங்கிலத்தில் எழுதப் பட்ட வேறுசில நூல்களிலும் பேலால யாதவர் ஹொய்ஸளர் என்ற பெயர்பெற்றதற்குப் பின்வருங் கதை கூறப்பட்டுளது:- தபங்கர் என்ற முனிவர் காட்டில் தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, ஒருபுலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அதுகண்டு அம்முனிவர், அப்போது வேட்டை முடித்துவந்து நின்ற சளன் என்னும் யாதவ அரசனை நோக்கி, 'இப்புலியைக் கொல்க' எனலும், அவ்வரசனும் அதனைத் தன்னம்பால் எய்து வீழ்த்தினமையால், அவன் வமிசத் தோர் "ஹொய்சளர்”+ எனக் கன்னடத்தில் வழங்கப்பட்டார்-

  • The Tamils 1800-years ago. pp. 114.
  • இந்நூல், தமிழ்வசனநடையில் அமைந்தது. சென்னை மியூஸ்யத்தைச்

சார்ந்துள்ள கையெழுத்துப் புத்தகசாலையில் இதன் பிரதி யுள்ளது. t கன்னடத்தில், "ஹொய்-சள்' என்பது, 'கொல்-சளனே' எனப் பொருள் படும் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/25&oldid=990577" இலிருந்து மீள்விக்கப்பட்டது