பக்கம்:வேளிர் வரலாறு.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு வேளிர் வரலாறு. என்பதாம். * இக்கதை அப் பேலாலரைப்போலவே துவாரகையி னின்றுவந் து முற்காலத்துத் தமிழ்நாடாண்ட வேளிர் குலத்தவ னாகிய இருங்கோவேள் என்பான் 'புலிகடிமால்' எனப் பெயர்பெற்ற தன் காரணத்தையும் விளக்கக்கூடிய தன்றோ. புலியைக் கொன்று முனிவரைக்காத்த யாதவத்தலைவனொருவனைத் தங்கள் வழிக்கு -ஆதி முன்னோனாகக் கொண்டமை பற்றியே, அவ்விருவரும் ஹொய் சளர் எனவும், புலிகடிமால் எனவும் ஒத்த சரித்திரம் பெற்றனர் என உணர்க. இவ்வாறு, 1800- ஆண்டுகட்கு முற்பட்டவேளிரும், 900- ஆண்டுகட்கு முந்திய பேலாலரும் சாதிபாலும் பெயராலும் சரிதத் தாலும் பெரிதும் ஒற்றுமைகொண்டு, நாம் ஒரே குலத்தவர் என்று காட்டிக்கொள்வதைக் காணலாம். இனி, இவ்விருவகை யாதவரும், முறையே வேள் அல்லது வேளாளர் எனப் பெயர்பெற்றதன் காரணமும் ஆராயத்தக்கதாம். விந்தியமலையின் தென்பக்கத்து நாடுகளை ஆண்டுவந்த பழைய அரச ருள், சளுக்கியர் என்பவரும் ஒருவர் என்பது பலருக்குத் தெரிந்தது. இவ் வரசரது புரா தனராஜ்யம், கூர்ச்சரமும் அதன் பக்கமுமாம். பிற் காலத்தே, இவருள் ஒரு கூட்டத்தார் கீழ்கடலைச்சார்ந்த நாடுகளைக் கைப்படுத்தாண்டமையால், இவ் வேறுபாடறிதற்கு இவர்களைக் கீழைச்சளுக்கியர் எனவும், மேலைச்சளுக்கியர் எனவும் இருதிறத்தா ராகச் சரித்திர நூலோர் வழங்குவர். இவருள், தென்னாடாண்ட

  • மைசூர் கெஸட்டியர், 385-ம் பக்கத்தும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது;

ஆனால் அடியில்வருமாறு சிறிது வேறுபடுகின்றது:- சளன் என்ற அரசன், சசகபுரத்தை அடுத்த காட்டிலுள்ள தும் தன் குலதேவதையுமான வஸந்திகா தேவியை வணங்கச் சென்றிருந்தபோது, அவன் அத்தேவியைத் தொழமுடியா வண்ணம் காட்டினின்று பாய்ந்துவந்த புலியொன்றால் தடுக்கப்பட்டான். அப் போது, அக்கோயிற் குருவானவர் பக்கத்திருந்த இரும்புத் தடியொன்றை எடுத்து அவ்வரசன்கையிற் கொடுத்துக் (கன்னட பாஷையில்) 'ஹொய் சள'! எனக் கூற, அதன்படி அவனும் அத்தடியால் ஒங்கியடித்து அப்புலியை இருந்த விடத்தே சாகும்படி வீழ்த்தினான். இவ்வாறு, குருசொற்படி புலியை வீழ்த் திய அரியசெயல்பற்றி, அவ்வரசனும், அவன் வழியினரும் 'ஹொய்சளர்' என் னும் பெயர் பெற்றனர்; (அன்றியும்) இதுபற்றியே, இவ்வமிசத்தார் புலியைத் தம் கொடியாகவும் கொண்டனர்-என்பதாம்.

  • இச்சளுக்கியவமிசத்தின் வரலாறு, 'மைசூர்-கெஸட்டியர்' முதலிய சரித

நூல்களில் விளங்கக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/26&oldid=990576" இலிருந்து மீள்விக்கப்பட்டது