பக்கம்:வேளிர் வரலாறு.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. உரு மாம். இவ்வேள்குலத்தார் உழுதூண்டொழிலை வழிவழியாகவும், ஏனைய குடிகளினும் சிறப்பாகவும் கொண்டமையால், அச்சிறப்புப் பற்றி, அவர்பெயரடியாக, 'வேளாண்மை ' என்பது உழு தூண் தொழிற்குரிய பெயராக வழங்குவதாயிற்று. இதுபற்றியே, வேளாண் மாந்தர்க் குழு தூ ணல்ல - தில்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ” எனத் தொல்காப்பியருங் கூறுவாராயினர். அன்றியும், வழிவழியாகவந்த வேளிரது வள்ளன்மையும் சிற்றரசுரிமையும் நோக்கி, வேளென்பது உபகாரி என்னும் பொருட்கும் சிற்றரசு என் னும் பொருட்கும் உரிய சொல்லாகவும் வழங்கப்பெற்றது. பண் டைப் பதமாகிய வேள், வேளார் என்பவை, புதுக்கோட்டை ஸம்ஸ் தானத்தைச் சார்ந்த தேர்க்காட்டூரிலும் பிரான்மலைப்பக்கத்தும் உள்ள வேளாளரில் ஒரு கூட்டத்தார்க்கு இன்றும் பயின்றுவருதல் அறியத்தக்கதாம். இதுகாறும் கூறிப்போந்தவற்றால், தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் கண்ணன்வழியினராய்த் | துவாரகையினின்று குடியேறியவர் என்றெழுதிய நச்சினார்க்கினியர் கூற்று, அவர் யாதவ குலத்தவரென்பதைக் குறிப்பதென்பதும், இச்செய்திக்குப் பொருந்த, வேளிர் துவாரகையினின்று வந்தவ ரெனப் புறநானூற்று மேற்கோ ளுண்டென்பதும், பாரத காலத்தை

  • உழுதுண்பாரை 'வெள்ளாளர் ' என வழங்குதலுமுண்டு ; இதற்கு

'வெள்ளத்தை ஆள்பவர் ' என்பது பொருளாம். பெருக்காளர், காராளர் என் பவற்றுக்கும் இங்ஙனமே பொருள் கூறுவர். இச்சொல், வேளாளர் என்பதின் வேறாதலின், ஈண்டாராய்ச்சியில்லை என்க.

  • வேளார் என்ற பெயர், பண்டைச் சோழவரசரது மந்திரிகளும் படைத்

தலைவருமாகிய பலர்க்கு வழங்கிவந்ததென்பது சாஸனங்களால் விளங்குகிறது; ராஜராஜேந்திர மூவேந்த வேளார், வீரசோழ இளங்கோவேளார் எனக்காண்க. (S. I. I; Vol III, p. 115). இதனாற் பிற்காலத்துத் தமிழ்வேந்த ராலும், இவ் வேளிர் அபிமானிக்கப்பட்டுவந்தமை வெளியாகும். + இப்பிரான்மலையே, வேள் - பாரியின் பறம்புமலையாம். இந்நூலில், வேள் - பாரி என்ற விஷயம் பார்க்க. 1 சாளுக்கியர், கண்ணன் வழியினரென்று சிறப்பாகக் கூறப்பட்டிலரேனும், பொதுவாக விஷ்ணுவமிசத்தினராகத் தம்மை வழங்கியிருத்தல் சாஸனங்களால் அறியப்படுகின்ற து (Ind. Ant, 1890, p. 425.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/41&oldid=990591" இலிருந்து மீள்விக்கப்பட்டது