உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு வேளிர் வரலாறு. யடுத்து யாதவர் தெற்கே வந்தேறியவர் என்ற குறிப்பு முன்னூல் களினின்று அறியப்படுதலோடு, வடநாட்டுப் பண்டிதராலும் அஃது ஆதரிக்கப்பட்டுள்ளதென்றும், வேளிர் யாதவகுலத்தவரே என்பது பிற்காலத்தில் துவாரகையினின்று வந்து தென்னாடாண்ட ஹொய் சள-பேலாலயாதவர், இவருடன் பல்லாற்றானும் ஒத்திருத்தலால் விளங்குவதென்பதும், வேள்புலத்தினின்று வந்தமையே அவ்விரு வரும்வேளிரெனவும், பேலாலரெனவும் பெயர் பெற்றதன் காரணமாக வேண்டுமென்பதும், இவ்வேளென்ற பதம் சளுக்குவேந்தர்க்கும் நிகண்டுகளில் படிக்கப்பட்டுள்ளதென்பதும், இச் சளுக்கரும் யாதவ குலத்தில் ஒருகிளையினரே என்பதும், முனிவ ரொருவரது யாகபாத் திரத்திற் றோன்றிய வரலாறு சளுக்கருக்கும் பண்டைவேளிர்க்கும் உரியதாகத் தெரியவருதலின் அவ்விருவரும் ஒருகுலத்தவரென்ப தும், கொடுந்தமிழ்நாடுகளில் ஒன்றாகிய வேணாடு என்பது இவ் யாதவரது புராதனபூமியாகிய வேள்புலத்தையே குறிப்பதாகல் வேண்டுமென்பதும், பண்டைவேளிர் தமிழ்நாட்டுக் குடியேறிய காலம் கி. மு. 10-ம் நாற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்துமென்பதும், வேளிர் பெருங்கூட்டம் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இதுவாம் என்பதும், அன்னோர் பெருமை இன்ன வென்பதும் விளங்கியவாறு கண்டுகொள்க. இங்ஙனம், வேள்புலத்தினின்று தமிழ்நாடு புகுந்து ஆட்சி புரிந்த வேளிரும் அவரினத்தாராகிய வேளாளரும், தமது வரை யாது வழங்கும் வள்ளன்மையாலும், அரசராற்பெற்ற வரிசைகளா லும், எளியரைத் தாங்கிய அளியினாலும், நவிதற்காகா வலிமை யாலும் பண்டுதொட்டே இத் தமிழ்நாட்டிற் பெரும்புகழ் பூண்டு விளங்கினர். முற்காலத்தும் பிற்காலத்தும் விளங்கிய தமிழ்ப் பெருங் கவிகளிலே, இவர்களைப் பாடிப் பயன்பெறாதவர் எவருமே இரார். இவரது இரவாமலீயும் வள்ளன்மையை இத்தமிழகத்தே போற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/42&oldid=990590" இலிருந்து மீள்விக்கப்பட்டது