பக்கம்:வேளிர் வரலாறு.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. என வருவனவற்றால், பாரிமகளிர் ஒருசிலர் என்பதும், அவர் பாட வல்லவரென்பதும், அப்பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ இருங்கோவேள் என்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப் பட்ட ன ரென்பதும், அவ்வரசர் அதற்கு உடம்படாமையாற் கபில ராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டன ரென்பதும், * இவரைப் பார்ப்பார்ப் படுத்தபின் கபிலர் பாரி பிரிவாற்றாது வடக்கிருந்தன ரென்பதும் அறியப்படும். இங்ஙனம், பாரிமகளிரை அரசரெவரும் மணம் புரிந்து கொள் ளாமையால், அவர்களைத் தமக்கு வேண்டிய பார்ப்பார்சிலரது பாது காவலில் வைத்துத் தம்முயிர்க்குயிராயிருந்த வள்ளலிறந்ததன்பின் உலகத்தே தாம் உயிர்வாழ ஒருப்படாது-"பாரி! நீயும் யானுங் கலந்த நட்பிற்குப் பொருந்த யானும் நின்னுடன் கூடப்போவதற்கு மனமியையாமல் 'நீ ஈண்டுத் தவிர்க' என்று சொல்லி - இவ்வாறு மாறுபட்டனையாதலின், நினக்கு நான் பொருந்தினவ னல்லேன்; அதனால், நீஎனக்கு உதவிசெய்த காலங்களிலும் என்னை வெறுத்திருந் தனைபோலும்; இங்ஙனமாயினும், இப்பிறப்பின்கண் நீயும் நானுங் கூடி இன்புற்றிருந்தவாறுபோல, மறுபிறப்பினும் நின்னொடுகூடி வாழ்தலை விதி கூட்டுவதாக” என்ற கருத்துப்பட- மலைகெழு நாட மாவண் பாரி ! கலந்த கேண்மைக் கொவ்வாய், நீயெற் புலந்தனை யாகுவை புரந்த யாண்டே; பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லாது ஒருங்கு வரல்விடா தொழிகெனக் கூறி இனையை யாதலி, னினக்கு மற்றியான் மேவினே னன்மை யானே: ஆயினும் இம்மை போலக் காட்டி, உம்மை

  • கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர் என்பது, அம் மகளிரை

அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால், அவரைத் தமக்கினிய பார்ப் பார் சிலரது பாதுகாவலில் வைத்தமையே குறிக்குமெனப் பல நியாயங்காட்டி எழுதுவர் இராகவையங்கார் அவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/70&oldid=990622" இலிருந்து மீள்விக்கப்பட்டது