உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. முழவுமண் புலரா இரவல ரினைய வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான் அமரா வள்ளியன் என்ன நுவலு நின் நல்லிசை தரவந் திசினே”* என்னும் பதிற்றுப்பத்தான் (எ-ம் பத்து. க) அறிக. இச்சேரன்பால் இவர் சென்றகாலத்து இப்பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறு ஒன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்-- கக2-ம் பாட்டு:-இது பாரி மகளிர் பாடியது. கககூ:- இஃது அவன் (-பாரி) மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டு போவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது. ககச :- அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உ00:-இது பாரி மகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது. உலக:--இது பாரி மகளிரை இருங்கோ வேளுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது. உ0உ :- இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது உஙசு:- வேள் -பாரி துஞ்சியவழி, மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக் கிருந்த கபிலர் பாடியது.

  • படர்ந்தோன் என்பது முற்று; அளிக்கென என்பது நீ எம்மை அளி

ப்பாயாக எனச்சொல்லி என்றவாறு; இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூ றேன் என்பது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல் லேன் எ - று. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மை அளிக்க: எனச் சொல்லி, இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனும் அல்லேன்; அஃ தன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனும் அல்லேன் ; ஈத்த திரங்காமை முதலாகிய பாரி நற்குணங்களை நின்பால் உளவாக உலகஞ்சொல் லும் நின்புகழ் நின்பாலே தரவந்தேன்”- என்பது இவ் வடிகளின் பழைய உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/69&oldid=990623" இலிருந்து மீள்விக்கப்பட்டது