பக்கம்:வைணமும் தமிழும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வைணவமும் தமிழும்


விருத்தத்தை அடுத்து இடம் பெற்றுள்ளது. பின்னது எண்சீர் விருத்தத்தாலாயது. முன்னதை அடுத்து முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

இவரது காலம் : திருமங்கை மன்னனும் இவரும் சம காலத்தவர் (ஏழாம் நூற்றாண்டு) எனக் கருதுவார் பேராசிரியர் மு. இராகவய்யங்கார்.[1] திருமங்கையாழ்வார் திருவரங்கம் திருமதிலையும் சிகரங்களையும் பெருஞ்செலவிட்டுக் கட்டுவித்த பொழுது தொண்டரடிப்பொடியாழ்வார் திருத்தொண்டு செய்து வந்தார் என்று 'குரும்பரம்பரைகள்' கூறுவதாலும் திருமங்கையாழ்வார் காலத்தே சமணம் முதலிய புறச்சமயங்கள் வைதிகச் சமயக் கடவுளரை இகழ்ந்து வந்த செய்தியை இந்த ஆழ்வார் குறிப்பிடுவதாலும் அங்கனம் கருதினர் பேராசிரியர் அய்யங்கார் அவர்கள். ஆயினும் பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள் வேறு சில சான்றுகளைக்கொண்டு. இவரைத் திருமங்கையாழ்வாருக்கு முற்பட்டவராகக் கருதுவார்.[2]

6). குலசேகராழ்வார் : கேரள மாநிலத்தில் 'கோழிக்கோடு' (கொல்லிநகர்) என்ற பகுதியை ஆண்டுவந்தவன் திடவிரதன் என்னும் அரசன். இவனுடைய அரசமாதேவி நாதநாயகி பல்லாண்டுகள் இவர்கட்கு மக்கட்பேறு இல்லை. பின்னர் திருமாலுக்குச் சிறப்பான ஆராதனங்கள் செய்து வழிப்பட்டதன் காரணமாக மாசித்திங்கள் புனர்ப்பூச நட்சத்திரத்தில் திருமாலின் மர்பிலுள்ள 'கெளத்துவமணியின்' கூறாக இளவரசராகத் தோன்றினார். இவருக்குப்பெற்றோர் இட்ட பெயர் 'குலசேகரன்'


  1. ஆழ்வார்கள் கால நிலை-பக் 139
  2. Religion and Philosophy of Nalayira Divya Prapandham with Reference to Nammalvar (Ph.D thesis p.123)-S.V. Univesity Publication)